விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளி யில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.
சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை 'வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்' என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
Keywords: ஜன்னல் இல்லாத விமானம், வான்வெளியைப் பார்வை, புது வரவு, புத்தாக்க செயல்முறை மையம்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?