தமிழ்நாட்டில் எந்த மூலைக்குச் சென்றாலும் அந்த மூலையிலெல்லாம் இந்தத் தற்போதைய விலையேற்றத்தைப் பற்றிய புலம்பலைப் பார்க்கலாம். இந்தப் புலம்பல் அற்ற ஒரு மூலையைக் கண்டுவிட்டால் அங்கே ஒரு சாமி சிலை வைத்து வழிபட்டுவிடலாம். அப்படி ஓர் எதிர்ப்பு. இந்த எதிர்ப்பை யார் யாரெல்லாம் செய்கிறார்கள்? பொதுமக்கள் என்று சொல்லப்படுபவர்கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஊடகங்கள். இந்த முக்கிய மூன்று பசப்பாளர்களின் பசப்பு மொழிகளின் நேர்மையின்மையை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் பொதுமக்களை எடுத்துக்கொள்வோம். இவர்கள் எல்லாருமே இலவசத்தை ஏற்றுக்கொண்டவர்கள். [...]
http://kathaludan.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?