முனிவர் சுதீட்சணர் திகைத்தார்.
காலையில் பூசை செய்து முடித்துப் பின் பீடத்தில் வைத்திருந்த சாளக் கிராமம் எவ்வாறு மறைந்தது?
ஆசிரமத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தார்.
வெளியிலும் போய்ப் புதர்களிலெல்லாம் தேடினார்; கிடைக்கவில்லை.
இளமையில் அகத்தியரின் சீடராக இருந்தபோது தான் செய்த தவறுகளால் பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் கிடைத்த பின்னும் ஏன் இப்படி என வருந்தினார்.
மறுநாள் வேறு சாளக்கிராமங்களுடன் பூசை செய்தார்.
ஆனால் அவையும் காணாமல் போயின.
முனிவர் தன் ஞானதிருஷ்டியால் பார்த்தார்.இரு குரங்குகள் சாளக்கிராமத்தை எடுத்துப்போய் நீரில் போட்டு அது மூழ்குவதைக் கண்டு மகிழ்வதைப் பார்த்தார்.
நளன்,நீலன் என்பது அவற்றின் பெயர்.
அவருக்குக் கோபம் வந்தது.சபிக்க எண்ணினார்.
ஆனால் இந்த வானரங்களுக்கு என்ன சாபம் கொடுப்பது?மனிதன் என்றால் குரங்காகப் போ எனச் சபிக்கலாம்.குரங்குகளை மனிதனாகப் போ என்றா சபிக்க முடியும்?
குரங்குகளின் இயல்பே குறும்பு செய்வதுதான்.
சாளக்கிராமம் காணமல் போய் தான் சிரமப்பட வேண்டும் என அவை எண்ணியிருக்கின்றன.
சிந்தித்தார்.யோசனை தோன்றியது.
இனி இந்த இரு வானரங்களும் எந்தப் பொருளை நீரில் போட்டாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என சாபம் அளித்தார்.
அதன்பின் அவ்வானரங்கள் எத்தனை முறை சாளக்கிராமங்களை எடுத்து நீரில் வீசினாலும் அவை மிதந்தன.முனிவரும் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி முழுவதும் அனுமனுக்குத்தெரியும்.
எனவே இலங்கைக்குப் பாலம் கட்டும் நேரத்தில்,அனுமன் நளன்,நீலன் இருவரையும் கற்களை எடுத்துக் கடலில் போடச்சொல்ல அவை மிதந்தன. பாலம் கட்டப்பட்டது.
யாரும் எந்தப் பொறியியற் கல்லூரியிலும் படிக்காமலே பாலம் கட்டப்பட்டது!
அதுதான் கடலில் மூழ்கியிருப்பதாக நம்பப்படும் இராமர் பாலம்!
இந்தக்கதையை எழுதியதும் எனக்கு வேறு ஒரு நினைவு.
சில காலத்துக்கு முன் சேது சமுத்திரத்திட்டம் என்ற ஒன்று செய்தியில் அடிபட்டதே !.பெரும் சர்சைக்கெல்லாம் காரணமாக இருந்ததே!!
அது என்னவாயிற்று?
அதன் தற்போதைய நிலை என்ன?
http://dinasarinews.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?