Thursday, 8 December 2011

ரகசிய கேமரா: சினிமா பாணி சந்தேக கணவர் கைது

 
 
 
சென்னை அம்பத்தூர், சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா. இவரின் கணவர் மகேந்திரன். அரசு பஸ் டிரைவர். கணவர் கொடுமைப்படுத்துவதாக, அம்பத்தூர் போலீசாரிடம், கமலா புகார் கொடுத்தார்.
 
புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: பத்து வயது மூத்தவரான மகேந்திரனுக்கு, இளம் வயதிலேயே எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து வயதில் மகனும், ஏழு வயதில் மகளும் உள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு, தினமும் அசிங்கமாக திட்டுகிறார். அடித்து உதைக்கிறார். சந்தேகம் அளவுக்கு மீறி வீட்டில் கழிவறை, குளியலறை, சமையலறை என அனைத்து இடங்களிலும், ரகசிய கேமரா பொருத்தி சி.சி.டி.வி.,யின் மூலம் உளவு பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
 
 
போலீசார் வழக்கு பதிந்து, மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த மகேந்திரன், மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். மீண்டும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்த, மகேந்திரன் மீண்டும் மனைவிக்கு தெரியாமல், வீட்டில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.அதை தட்டிக் கேட்ட மனைவியை அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பான புகாரின்படி, மகேந்திரனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர்.




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger