Thursday, 8 December 2011

பலவீனமே உங்கள் ப���மாகலாம்!




ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்குக் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும் என மிகுந்த ஆசை.ஆனால் அவனுக்கு இடது கை இல்லை.முழுக்கையும் ஒரு விபத்தில் இழந்து விட்டிருந்தான். ஆயினும் அவன் ஆசைப் பட்டான்.

ஒரு கராத்தே மாஸ்டரிடம் சென்றான்.அவரும் கற்றுக் கொடுக்க இசைந்தார். பயிற்சி தொடங்கியது.சிறுவனும் மிக ஆர்வத்துடன் தீவிரமாகக்  கற்றுக் கொண்டான்.

ஆனால் ஓராண்டுக்குப் பின்னும் ஒரே ஒரு தாக்குதல் முறையையே   அவனுக்குச்  சொல்லிக் கொடுத்திருந்தார்.அவனுக்கு அது ஏன் என்றே தெரியவில்லை.அவன் மாஸ்டரிடம் கேட்டான் "வேறு முறைகள் ஏதும் கறுத் தரவில்லயே?"

மாஸ்டர் சொன்னார்"இது ஒன்று போதும் உனக்கு.இதில் முழுத்தேர்ச்சி பெற்றால் போதும்."

சில மாதங்களுக்குப் பின்  மாஸ்டர் அவனை ஒரு கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செய்தார்.அவனே ஆச்சரியப் படும் விதத்தில் அவன் முதல் இரண்டு சண்டைகளிலும் எளிதாக வெற்றி பெற்றான்.

மூன்றாவது போட்டி சிறிது கடினமாக இருந்தது.சிறிது நேரச் சண்டைக்குப் பின் எதிராளி பொறுமையிழந்த நேரத்தில் சிறுவன் அவனது ஒரே தாக்குதலைப் பயன் படுத்தி வென்றான்.

இறுதிப்போட்டிக்கு அவன் தகுதி பெற்று விட்டான். அப் போட்டியில்   அவன் எதிரி பெரியவனாக,பலம் வாய்ந்தவனாக இருந்தான்.அவனுடன் ஒப்பிடும்போது சிறுவன் சண்டைக்கே தகுதியற்றவன் போல் காணப்பட்டான்.

போட்டி ஆரம்பமானது.நீண்டநேரம் நடந்தது.ஒரு கட்டத்தில் எதிரி தனது பாதுகாப்பைச் சிறிது தளர விட்ட நேரத்தில் சிறுவன் அவனைத்தாக்கி வென்றான்!

போட்டி முடிந்து திரும்பும்போது மாஸ்டர் எல்லாச் சண்டையைப் பற்றியும் தன் கருத்துகளைச் சொன்னார்.அப்போது பையன் கேட்டான் "மாஸ்டர்.ஒரே ஒரு தாக்குதலை  வைத்துக் கொண்டு என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?"

மாஸ்டர் சொன்னார்"நீ கற்றுக்கொண்டது கராத்தேயிலேயே மிகக் கடினமான ஒரு தாக்குதல்.அதோடு இந்தத் தாக்குதலி லிருந்து  எதிரி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உன் இடது கையைப்  பிடித்தால்தான் முடியும்!"

ஆம்!அச்சிறுவனது பெரிய பலவீனமே அவனது பெரிய பலமாகி விட்டது!

உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தால், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!









http://dinasarinews.blogspot.com



  • http://naamnanbargal.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger