கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வடிவேலுவின் வெடி நகைச்சுவையை தமிழ் ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது).
இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், "மம்பட்டியான்'ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா'னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?