ஒரு மாதத்திற்கு மேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நடிகை மனோரமா இன்று, "டிஸ்சார்ஜ் ஆகிறார். குடும்பத்துடன் காளஹஸ்தி கோயிலுக்கு சென்றபோது, தலையில் அடிபட்டு, கடும் தலைவலி காரணமாக, நடிகை மனோரமா, கடந்த அக்., 25ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரின் தலையில் ரத்தம் உறைந்தது கண்டறியப்பட்டது.
இதை சரிசெய்ய, கடந்த மாதம் 1ம் தேதி, ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு, உடல் வீக்கம், சளி ஆகிய பிரச்னைகள் இருந்தன. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே, மனோரமாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார் .
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?