Thursday, 6 October 2011

நடு இரவில் பதிவர��� பயமுறுத்திய மோ��ினி பிசாசு....!!!!




மும்பை ஏர்போர்டில் பணி புரிந்த சமயம். எங்கள் ரூமில் இருந்த நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாராவது ஊரில் இருந்து வந்தால் அவர்களை அரவணைத்து வேலையும் வாங்கி கொடுத்து ஆதரிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான் இது. அப்படி வந்த நண்பர்கள் சிலருக்கு ஏர்போர்டில் வேலை வாங்கி கொடுத்தோம். ஏர்போர்டில் இருந்து எங்கள் ரூமிற்கு நடந்து வர போக இருபது நிமிஷம் ஆகும். 


அப்படி போயி வரும் நண்பர்கள் அடிக்கடி குளிர் காய்ச்சலில் படுக்க [சீதோஷ்ணம்] தொடங்கினர். நாங்களும் ஆஸ்பத்திரி கொண்டு போயி குணமாக்குவது வழக்கம். அந்த நேரம் பக்கத்து அம்மன் கோவில் பூசாரி  ஒருவர் சொன்னார்.... இந்த காய்ச்சல் சாதாரணமானது அல்ல அவர்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். 


ஒரு நண்பனை ஒரு நாள் அவரிடம் அழைத்து சென்றோம். அவரும் அருள் [ங்கே] வந்து மங்காத்தா ஆடினார் ஆடி விபூதியை அள்ளி வீசினார். பின்பு சொன்னார் டாய் உன்னை பிடித்திருப்பது மோகினி பிசாசு என்று. எப்பிடி சாமின்னு கேட்டோம். அவர் சொன்னார் இவன் வேலைக்கு போயிட்டு நேத்து ராத்திரி வீடு திரும்பும் போது வரும் வழியில் இருக்கே ஒரு பெரிய ஆலமரம் அதுல இருந்த மோகினி இவனை பிடிச்சிருக்காள் என்றார். காய்ச்சல் நண்பன் இன்னும் கிடு கிடு என நடுங்க தொடங்கினான்....


எல்லா நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் ஒரு உள் வட்டம் உண்டல்லவா..? அப்பிடி எனக்கு மாரி என ஒரு நண்பன் உண்டு அவனை நாங்கள் டுவென்டி'ன்னு கூப்பிடுவோம். அவனுக்கும் எனக்கும் ஆர்வம் பொத்துகிடிச்சி மோகினியை பார்க்க [யப்பா] அவன் கங்கை கொண்டான் பக்கம் இத்திகுளத்தை சேர்ந்தவன் . நிறைய பேய் கதை[பொய்] சொல்லுவான் அவனும் நானும் திட்டம் தீட்டினோம் மக்கா இன்னைக்கு நாம மோகினியை பார்க்க போறோம்னு. 



அவன் சொன்னான் மோகினி சரியாக ராத்திரி பனிரென்ன்டு மணிக்குதான் வரும் என்றான். சரியாக 11:30 மணிக்கு கிளம்புகையில் நண்பன் சொன்னான் மனோ இப்பிடி வெறுங்கையோட போனா மோகினி நம்மளை அடிசிரும் என சொல்லிட்டு என் கையில ஒரு அருவாளை தூக்கி கொடுத்தான் அவன் ஒரு கத்தியை எடுத்து கொண்டான். என்ன அருவா கத்தின்னு கேக்குறீங்களா...?மும்பையில அப்போ  இந்து முஸ்லிம் சண்டை நடந்துட்டு இருந்த நேரமாகையால் பாதுகாப்புக்கு அது எங்களுக்கு தேவையாக இருந்தது [இப்போ அதெல்லாம் இல்லை] கிளம்பியாச்சு மோகினியை பார்க்க, பாழடைஞ்ச பங்களாவும் அருகில் உள்ள ஆலமரத்தையும் நோக்கி. . . .


நாங்கள் போயி அருகில் உள்ள பாழ் அடைஞ்ச பங்களா அருகில் மறைவாக ஆலமரத்தை காணும் வகையில் படுத்து கொண்டோம் அருவாளை அழுத்தி பிடித்துக் கொண்டே. நேரம் மெதுவாக, பயமாக கரைய ஆரம்பித்தது. மணி 12 நடு நிசி ஒரே ஊளைசத்தம் ஆந்தை, கூவை, வவ்வால் எல்லாம் கிடந்து உறுமிக்கிட்டே இருக்கு நாங்கள் மூச்சை கூட மிக மெதுவா விட்டவாறே காத்திருந்தோம்.



மணி 12:30 மோகினி சேச்சியை காணவில்லை, மணி 1:00 காணவில்லை. நண்பன் மெதுவாக சொன்னான். மோகினி நிர்வாணமாதான் சுத்தும் எனவே நாமும் நிர்வாணமாக ஆலமரத்தை சுத்தினால் நாமும் பேய்தான் என எண்ணிக்கொண்டு மோகினி வெளியே வரும் வா என்றான். 



ஆத்தீ நான் மாட்டேன் என அலற [மெதுவா] நான் மட்டும் போறேன் நீ இங்கேயே இருந்து பாரு என சொல்லிவிட்டு உடைகளை களைந்து என்னிடம் [மொத்த நிர்வாணம்] கொடுத்து விட்டு கத்தியை மட்டும் கையில் வைத்து கொண்டு போனான். எனக்கு திகில், அவன் மெதுவாக ஆலமரத்தை சுத்த ஆரம்பித்தான்.


எனக்கு இப்போ அவன் மனுஷனா பேயான்னு சந்தேகம் வந்து நடுங்க ஆரம்பிச்சிட்டேன். சத்தம் போட்டு கூப்பிடவும் முடியாது, மோகினியையும் காணலை மண்ணாங்கட்டியும் காணலை ஆனா நண்பன் பேயா தெரிய ஆரம்பிச்சிட்டான் ஏன்னா  பேய் வேஷம் மாறியும் வரும்னு பெரியவங்க[நாசமா போவ] சொல்லியிருக்காங்க.


எனக்கு இவன் மேலேயே சந்தேகம் வலுக்க அருவாளை பின்னாடி  இருந்து உருவினேன் வலது கையில் இறுக்கமாக பிடித்து கொண்டேன். அவன் அசராமல் நடந்து கொண்டிருந்தான். பிறகு அவனே சத்தமாக சொன்னான் மனோ மோகினியும் இல்லை ஒரு "......." இல்லைன்னு சொல்லிட்டு என்ன கூப்பிட்டான் எலேய் நீயும் வான்னு, 


எனக்கோ பயம் பயபுள்ள பக்கத்துல வந்து வித்யாசமா எதும்  சமிக்சை தெரிஞ்சா அருவாளை வீச ரெடியானேன். நானும் தைரியத்தை வரவச்சி [கிடு கிடு] அவனை கூப்பிட்டேன் நீ இங்கே வான்னு, வந்தான் அருவா பிடி இறுகியது, வந்தவன் கத்திய கீழே போட்டுட்டு உடைகளை அணிந்தான் நான் ரெடியா....அருவாளோடு ஒதுங்கி நின்றேன்.

படத்தின் இடது பக்கம்தான் அந்தகுளம், புல் மண்டி கிடக்கிறது. இப்போது அந்த இடம் பெரிய கார்பார்க்காக மாறியுள்ளது. நாங்கள் திருடிய தென்னைமரங்களும் அதில் இருக்கிறது.

ஆக்கங்கெட்ட கூவ ஒன்னையும் காணலைன்னு சொன்னான். சொல்லிட்டு கிளம்ப நான் ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னால் போனேன். வெளிச்சத்துக்கு வந்த பின்தான் பயம் போயி அருவா பின்னுக்கு போனது. சரி வந்ததே வந்துட்டோம் த லீலா [THE HOTEL LEELA] ஹோட்டல்ல[ஃபைவ் ஸ்டார்] இளநி களவாண்டு குடிப்போம்னு கம்பி எம்பி சாடி செவ்வெளனி ஒரு குலைய வெட்டி, என்னது யாரு ஹோட்டல் செக்கூர்ட்டியா...? நம்ம கையில சீவலப்பேரி அயிட்டம்லா இருக்கு பக்கத்துல வருவானாக்கும்.


பக்கத்துல ஒரு குளம் உண்டு [இப்போ அந்த இடம் பெரிய கார்பார்க்கிங்] அங்கே போயி இளநிய வெட்டி குடிச்சுட்டு மோகினி கதைய சொல்லி சிரிச்சி அவனை பேயாக நான் நினச்ச கதையும் பேசி சிரி சிரின்னு சிரிக்கும் போது சொன்னான். இனி என் வாழ்கையில உன்ன மாதிரி ஒருத்தன்கிட்டே அருவாளை கொடுக்க மாட்டேன்னு சபதம் செய்தான் [ஹா ஹா ஹா] அப்பிடியே ரூம் வந்து படுத்து விட்டோம்.



 மறுநாள் பெரும் பரபரப்பு.....எங்க ரூமில், என்னாச்சுடான்னு  எழும்பினேன். மனோ நம்ம காளியப்பனுக்கு காலையிலே குளிர் காய்ச்சல், அதான் பூசாரிகிட்டே கூட்டிட்டு போகணும் நீயும் வான்னான். சரின்னுட்டு நம்ம டுவென்டி'யையும் எழுப்பிட்டு கூட போனோம். காளியப்பன் குளிர் காய்ச்சல்'ல நடுங்கிட்டு இருந்தான்.

படத்தின் இடது பக்கம்தான் எங்கள் ஏரியா, இப்போ எல்லாம் பில்டிங்காக மாறியாச்சு.

 பூசாரி வீட்டு சாமி படம் முன்பு இவனை உக்காறவச்சி அவர் சாமி ஆடினார்  ஆக்ரோஷமாக. விபூதியை வீசினார் பின்பு கேட்டார் அவனிடம் நேற்று ராத்திரி எங்கேயும் போனியான்னு. காளியப்பன் சொன்னான் ஆமா சாமி நான் நேற்று பாத்ரூம் போக குளத்து பக்கம் போனேன் அங்கே இருட்டுல ரெண்டு பேயிங்க உக்காந்து என்னத்தையோ வெட்டி வெட்டி தின்னுட்டு இருந்துச்சி அதை பாத்து நான் பயந்துட்டேன் சாமீன்னு கதருனான்.


 நம்ம நண்பன் டுவென்டி என் கையை அழுத்தினான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் சிரித்துகொண்டோம். "அந்த பேயே நாங்கதானே" அங்கே சொன்னால் களவாணித்தனம் [இளநி] வெளியே வந்துருமே...வெளியே வந்து நானும் டுவெண்டியும் சிரிச்ச சிரிப்பு இருக்கே......அட ஆக்கங்கெட்ட கூவைகளா.................

டிஸ்கி : இது எனது பதிவில் இருந்து மீள் பதிவு.

"மனோ"தத்துவம் : உரியவருக்கு நன்றி சொல்வதற்கு காசு பணம் கொடுக்க தேவையில்லை, எனவே தாராளமாக நன்றியை சொல்லி வாழ்த்துவோம்.






http://sex-dress.blogspot.com



  • http://sex-dress.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger