ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்க இருக்கிறார் என்பது ஆல்ரெடி தெரிந்த செய்தி தான். தெலுங்கில் தூக்குடு என்ற மகேஷ் பாபு படத்தை ரீமேக் செய்ய நினைத்தார்கள். தூக்குடு படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அதனால் ஏ.எம்.ரத்னம் தரப்பு அப்செட்டில் இருந்து வந்ததாம். அப்போது தான் இந்தியன் பார்ட் - 2 எடுக்கலாம் என்ற யோசனையை இயக்குனர் ஷங்கரிடம் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர்.
இது பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் ஷங்கருடன் அஜீத் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் அஜீத் தான் நடிக்க இருந்ததாம். அந்த வாய்ப்பு தவறிப்போக, இந்தியன் பார்ட்- 2வில் இருவரும் இணைவார்கள் போல.
சிட்டிசன் படத்தில் 7 விதமான தோற்றங்களில் அஜீத் நடித்தார். அதனால் எந்த கெட்டப்பில் வேண்டுமானாலும் அஜீத் கலக்குவார் என்று விரைவில் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.
இந்தியன் படத்தை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம் என்பதால் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்கிற உரிமையும் அவருக்கே உரித்தானது. அதனால் மிக எளிதாக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் அவர், இதை ஷங்கரே எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது ரத்னத்தின் விருப்பம் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதில் தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம். ஷங்கரின் நண்பன் படத்தின் வேலைகள் முடிவடைய இருப்பதால் ஷங்கரும் தன் அடுத்த படத்திற்கான வேலைகளை செய்து வருகிறாராம்.
ரஜினி படமான பில்லா ரீமேக்கில் நடித்து புகழ் பெற்றார் அஜீத், இப்போது பில்லா படத்தின் பார்ட்-2வில் நடித்து வருகிறார். அதே போல் கமல் நடித்த இந்தியன் படத்தின் பார்ட் - 2விலும் நடிக்க இருக்கிறார்.
இந்தியன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?