Thursday, 6 October 2011

பிரபல பதிவர்கள் ���ந்திப்பு காமெடி கும்மி....!!!!



அடுத்த பதிவர் சந்திப்பு நாகர்கோவிலில் ஆர்கே விஜயனின் ஆபீசில் நடக்கிறது. ஆபீசை படுபயங்கரமாக அலங்கரித்து வைத்திருக்கிறார். பதிவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள், மாப்பிளை'ஹரீஷ் எல்லாரையும் வரவேற்கிறான்.


முதல் ஆளாக மலேசியா'செல்வி வருகிறார்...


மா'ஹரீஷ் : அக்கா வாங்கக்கா நீங்க மலேசியாவுல இருந்து நேரே இங்கே வருவதாக கேள்வி பட்டேன் ரொம்ப சந்தோசம், நீங்க போட்டுருக்குற டிரஸ் ரொம்ப சூப்பரா இருக்கு, இதை மலேசியா மஹால்'ல வாங்குனதா...?


செல்வி : அதெல்லாம் இருக்கெட்டும், இந்த ஆபீஸ் ஓனர் எங்கே...? நான் மலேசியாவில் கஷ்ட்டபட்டு படிச்சி வாங்குன பட்டத்தை, அது என்ன பறக்க விடுற சூப்பர் ஸ்டார் பட்டமான்னு கேட்டுட்டார், அதான் ஒண்ணுல ரெண்டு பார்க்காம போறதா இல்லை எங்கே விஜயன்...? என சீற ஹரீஷ் பம்முகிறான், இதைகேட்ட விஜயன் ஓடிபோய் கிச்சனுக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்.


கல்பனா'பாப்பா : எங்கே எங்கே என் அண்ணனுங்க எல்லாம் எங்கே அண்ணா அண்ணா விஜயன் அண்ணா, மனோ அண்ணா எங்கே...? வருவாங்கதானே, நான் அவங்க பொண்ணுக்கு நிறைய சாக்கிலேட் வாங்கிட்டு வந்துருக்கேன்...விஜயன் மனதுக்குள் ம்ஹும் பார்ரா வந்துருக்குறது என் ஆபீசுக்கு, மிட்டாய் அவர் பொண்ணுக்கா??


நாய் குட்டி மனசு : அய்யய்யோ சார் லேட்டாகிருச்சு ஸாரி, எனக்கு ஆபீஸ்ல லீவே தரமாட்டேங்குறாங்க, அதனால ஆபீஸ்ர்கிட்டே சொல்லி புகார் பண்ணனும்...


விஜயன் : ஆஹா...ஒரு முடிவோடதான் வந்துருக்காங்க போல தெரியுதே.....

ஒவ்வொரு பதிவராக வந்து மேஜையில் வட்டமாக அமருகிரார்கள்....எல்லாரும் வந்தபின்பு, கடைசியாக ஆபீசரும் அவர் பாடிகார்ட் திவானந்தாவும் வருகிறார்கள், பதிவர்கள் முகத்தில் பீதி........விஜயன் முகத்தை ஆபீசர் ஏறிட்டு பார்க்க பம்மிக்கொண்டு பக்கத்தில் வருகிறார் விஜயன்.


விஜயன் : ஆபீசர், பெரிய பெல்ட்டா ஹரீஷ் கடையில இருந்து வாங்கி யாருக்கும் தெரியாமல் உங்க சேருக்கு பின்னால தொங்கவிட்டுருக்கிறேன்...[[எவனெல்லாம் அடி வாங்கப்போரானோ]]

ஆபீசர் : நல்லது....

திவானந்தா : நான் வேணும்னா பெல்ட்டை எடுத்து கையில வச்சிக்கவா கை ஒரு மாதிரி இன்னைக்கு அரிக்குது, என காலரை தூக்க....விஜயன் கலவரமாகிறார்....

விஜயன் : ஆஹா எருமைனாயக்கன்பட்டி மாதிரி கலவரமாகிருமோ...??

மீட்டிங் ஆரம்பம்,


இம்சை அரசன் : எலேய் எவனாவது போட்டோ எடுத்தீங்க கொடலை உருவிப்புடுவேன், அதேமாதிரி எங்க அண்ணன் மனோ'வை பற்றி பேசுனாலோ, ஒரு லாரி துருப்பிடிச்ச அருவாளை தீட்ட வச்சிபுடுவேன்...

டெரர் : ஏ பொருய்யா ஆரம்பத்துலையே அருவாளை நீட்டாதே இதென்ன நாம போன கொடைக்கானல்னு நினச்சிய்யா...?


செல்வா : எனக்கும் முட்டைக்கும் என்ன பிரச்சினன்னே இன்னும் தெரியலை. அதை தீர்த்து வையுங்க...


பன்னி : டேய் இதென்ன வாய்க்கா வரப்பு சண்டையா தீர்த்து வைக்கிறதுக்கு, உன் பதிவை படிச்சிட்டு அந்த பன்னாடை பரதேசி மனோ நடுராத்திரி அலறி எழும்புரானாம் அடங்குடா....


சிரிப்பு போலீஸ் : முட்டைன்னா உடையதான் செய்யும் சண்டையில உடையாத முட்டை எங்க இருக்கு...???


ஆபீசர் : தம்பி, நல்லகாரியத்தை பேசுங்க...என்று சொல்லவும் திவானந்தா பெரிதாக செருமுகிறார்....சபை பேய் முழி முழிக்குது...


எம் ஆர் : வாயு போகணும்னா என்னா செய்யனும், அது வந்தா அடக்கப்புடாது, அதாவது, தும்மல், ஏப்பம், இருமல்........இம்சை அரசன் அருவாளை உயர்த்தி காட்டுகிறான், டாக்டர் வாயை கைவைத்து பொத்துகிறார்...

மகேந்திரன் : கிழக்கு வெளுக்கையிலே நான் சேலை துவைக்கயிலே நீ சாணி தெளிக்கையிலே'சத்தமாக பாடுகிறார்.....செல்வா சேரை விட்டு எழுந்து ஓடிவந்து அவர் கால்ல விழுந்து கெஞ்சுகிறான்...

செல்வா : அண்ணே முடியல அண்ணே, எனக்கே முடியலைனா இந்த சனங்களை கொஞ்சம் நினச்சி பாருங்கண்ணே...


விக்கி : அமெரிக்கா எனக்கு பேரிக்கா, வியன்னா எனக்கு கொய்யாக்கா, ஆனால் நான் வாங்குவதோ கொலு வைக்கும் வீட்டில் பல்பு...


தமிழ்வாசி : அவ்வ்வ்வ் அன்னைக்கு கமல் வந்து அழவச்சி சொம்பை நசுக்குனாறு, இன்னைக்கு இவனா..? வெளங்கும் ...


தனிமரம் : ஏய் நான் கூட்டமா இருந்தாலும் தனி ஆளு தனிமரம், எழுதி வச்சிக்கோங்க...


துஷ்யந்தன் : தனிமரமா...? தண்ணி மரமா தெளிவா சொல்லுய்யா...


சிபி : நான் திருந்திட்டேன் திருந்திட்டேன், மனோ கண்ணாடிமேல சத்தியமா திருந்திட்டேன், என் நண்பன் ஒருவனுக்கு நடந்த கொடுமை பற்றி சொல்லப்போறேன், அவனுக்கு எதனால டைவர்ஸ் ஆச்சுங்குரதை சொல்லப்போறேன்....


பன்னி : டேய் இங்கேயும் நீ பர்ஸ்ட் நைட் கில்மான்னுதான் கிளம்புவே உக்காரு படுவா பிச்சிபுடுவேன் பிச்சி, கண்ணாடி மண்டையா...


கவிதைவீதி : இங்க பாருங்க, இனி என் கவிதைக்கும் நான் போடும் படங்களுக்கும் சம்பந்தமே இருக்க கூடாதுன்னு இருக்கேன், என்னா என்னிடத்தில் வார்த்தை இருந்தும் அவளுக்கு கவிதை பிடிக்கலையாம்...


கரன் : டேய் இது எப்போ இருந்துடா சொல்லவே இல்லை எவ அவ...???


காட்டான் : நான் இப்போல்லாம் குழ போடுறதே இல்லை அதனால என்னை நம்பி வரலாம், அய்யனார் மாதிரி இருக்கேன்னு நினச்சிராதீக வாங்க பழகலாம்'ன்னு சொல்ல...ஆபீசர் சேருக்கு பின்னாடி எதையோ தேடுறதை பார்த்து அமைதி ஆகிறார்...


நிரூபன் : எனக்கு நேரமில்லை பாஸ், உடனே பஸ் பிடிச்சி அமெரிக்கா போகணும், அங்கே என் பால்யகால சிநேகிதியை பார்த்துட்டு நீ....ள...மா ஒரு கவிதை எழுதணும்...சொல்லும்போதே இம்சை அரசன் அழுகிறான் நிரூபன் கலவரமாகிறார்...


சிவகுமார் : நான் மும்பையில் எப்படி பாவ் பாஜி , உசல், மிசல், வடாப்பாவ் இதெல்லாம் சாப்புட்டுட்டு கையை கழுவாம பெஞ்சில துடைச்சிட்டு வரும்போது, மும்பை ஒரே அழுக்காக இருந்தது....

ஆபீசர் : உடன் நடவடிக்கை எடுக்கப்படும், அதெல்லாம் இருக்கட்டும் போ போயி கையை கழுவிட்டு வா, மறக்காம பினாயில் ஊத்தி கழுவு...திவானந்தா எழும்பி கையை முறுக்க, ஓடுகிறார் சிவகுமார்...


என் ராஜபாட்டை : அரசன், கிங், இதெல்லாம்.........ஆபீசர் பின்னால் இருந்து பெல்டை உருவுகிறார், ராஜபாட்டை டேபிளுக்கு கீழே ஒளியுறார்...

சிபி : நான் என்ன சொல்ல வாறன்னா....இப்பிடி பேசிக்கொண்டிருக்கும் போதே, சித்ரா ஓடி வருகிறார்....


சித்ரா : அண்ணா அண்ணா ஆபீசர் அண்ணா, எருமை நாயக்கன் பட்டியில காணாம போன பாம்பு இதோ கிடச்சிருச்சுன்னு பாம்பை காட்டியபடி உள்ளே ஓடி வர, 

சிபி கண்ணாடியை கழட்டி எரிஞ்சிட்டு விக்கியை ஒரு மிதி [[தெரியாத மாதிரி]] மிதித்து விட்டு தலை தெறிக்க ஓடுகிறான். விஜயன் அடங்கொன்னியா எது நடக்கப் புடாதுன்னு நினைச்சனோ அது நடந்துருச்சேன்னு ஆபீஸ் பால்கனியில இருந்து கீழே குதிக்கிறார்....

ஆபீசர், கையில் வச்சிருக்கிற பெல்ட்டை பாம்புன்னு நினச்சி தூரப்போட, அய்யய்யோ இது எல்லாத்துலயும் பெரிய பாம்புன்னு மொத்த பதிவர்களும் தலைதெறிக்க தெறிச்சி நாகர்கோவில் ஜங்சன் தெருக்களில் ஓடுகிறார்கள்.....!!!

"மனோ"தத்துவம் : புளிக்குள்ளேதான் கொட்டை இருக்கும், கொட்டைகுள்ளே புளி இருக்காது, அதுபோலதான் மூளையும்....[[எவம்லேய் அங்கே கல்லெடுக்குறது...???]]



http://sex-dress.blogspot.com



  • http://sex-dress.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger