வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!------பாரதி
பாரதி!அய்யா பாரதி!என்ன என்ன சொல்லிச் சென்றாய் அய்யா?,ஒவ்வொரு வீட்டிலும் கலை விளக்கம்!ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பள்ளிகள்!ஒவ்வோரு ஊரிலும் பல பள்ளிகள்!எங்கு பள்ளியில்லையோ,எங்கு கல்விக்கான ஊக்கம் இல்லையோ,எரித்திடு அந்த ஊரை!
வணங்குகிறோம் பாரதி,உன்னை!
வணங்குகிறோம் அன்னை கலவாணியே உன்னை இந்நாளில்!
வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்த் நிற்பாள் மலரடியே சூழ்வோமே......பாரதி
http://smsgalatta.blogspot.com
http://smsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?