Saturday, 10 September 2011

தவற விடக்கூடாத ச���ரு நிவேதிதாவின் கட்டுரை



  நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷ்யம். எனவே தான் நண்பர்களை சந்திக்க கூடுதல் கவனம் எடுத்து கொள்வது என் இயல்பு..

சென்ற வாரம் ஒரு நாள் , நண்பர் சந்திப்புக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன்.. 3 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றால் , இரண்டரை மணிக்கே அந்த இடததை அடைய பிளான் செய்வது என் வழக்கம்... சென்னை டிராபிக் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு..

ஆவலுடன் சொன்ன இடத்தில் காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால், சென்னை நகரின் டிராபிக் வேலையை காட்டிவிட்டது... நண்பரால், சொன்ன நேரத்துக்கு அந்த இடத்துக்கு வர இயலவில்லை...

அதற்கு பிறகு அரைமணி நேரம் காத்து இருந்தும் அவரால் வர இயலவில்லை....- டிராபிக்...

வேறு சில வேலைகள் இருந்ததால், அவரை சந்திக்காமலேயெ கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்... கனத்த மனத்துடன் அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்...


சென்னையில் சாலைகள் அமைக்கிறோம் , நகரத்தை விரிவாக்குகிறோம் என சொல்லி , மரங்களை அழிக்கிறார்கள் .. ஆனாலும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை... சரியான திட்டமிடுதல் இல்லாததால், தேவையின்றி மரங்கள் அழிக்கப்படுகின்றன, எந்த பயனும் இல்லாமல்..

இந்த சிந்தனையோடு நான் இருந்த போது, தினமலரில் சாரு எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..

அட... என ஆவலுடன் படித்தேன்...  மிகவும் தேவையான ஒரு விஷயத்தை , அழகாக சொல்லி இருந்தார்..
அவர் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுத்தி விட்டார் அவர்.. விரைவில் படிக்க வேண்டும்..

எழுத்தாளர் என்பதை தாண்டி , ஒரு ஜென் குரு போல அவர் மாறிக்கொண்டு இருப்பது கட்டுரையின் பல இடங்களில் தெரிகிறது..

மரம் பற்றிய கட்டுரையில், கோமியம் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என பல இடங்களை அவர் தொட்டாலும், என்னை கவர்ந்த இடம் இன்னொன்று...

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.


இப்படி அவர் முழங்கும்போது, எல்லோரும்  உயர் நிலை அடையும்  நன்முறையை , இந்தியா உலகுக்கு அளிக்கும் என பாரதியார் வரிகள் நினைவுக்கு வந்தன..
பொருத்தமான வரிகளை , கடைசியில் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு..

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது...படித்து பாருங்கள்.. பிரிண்ட் எடுத்து நண்பர்களுக்கு கொடுங்கள்

****************************************************************************


மனிதர் வாழ மரம் வாழட்டும்
- அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. 





வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.
சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.

நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

"மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?
"மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.
அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

"இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.
இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.

ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.
"பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.
ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.
இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:

ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?

-  நன்றி , தினமலர்


http://worldnews24by2.blogspot.com



  • http://worldnews24by2.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger