Saturday, 10 September 2011

ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!



என் மகனின் வகுப்பு தோழனும், நண்பனுமாகிய ஒரு உ பி மாநில பையனின் மரணம். பள்ளியில் பரீட்சை எழுதும் போதே லேசாக காய்ச்சல் அடித்திருக்கிறது, சாயங்காலம் ஆஸ்பத்திரி கொண்டு போக மலேரியா, அட்மிட் பண்ண சொன்னார்கள், அடுத்த நாள் பையன் இறந்து போனான்.

பார்க்கப் போனேன் வீட்டுக்கு, உடம்பை கிடத்தி வச்சிருந்தார்கள் கடும் கூட்டம் அதில், என் மகனும் அவன் இன்னொரு நண்பனுமாக உடம்பை பார்க்க முடியாமல் சுற்றி சுற்றி வந்ததை பார்த்த போது, அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நினைக்கும் போது என் கை தானாகவே நெஞ்சை அழுத்திக்கொண்டது.

காரணம் நேற்றுதான் கூட இருந்து பரீட்சை எழுதிவிட்டு விளையாடிவிட்டு வந்து இருக்கிறார்கள். இதுவும் தவறான சிகிச்சையின் மரணம் என சண்டை நடந்தது.....!!!  [[வரும் காலங்களில் என் மகனும் இதைப் பற்றி, நண்பனின் மரணம், பிரிவு  பற்றி பாரத்தோடு பதிவு எழுதக்கூடும்]]

நண்பனின் அக்காவும், நண்பனின் தங்கச்சியுமாகிய லட்சுமியின் மரணம். மலேரியா காய்ச்சல் முத்தி போயி ஆஸ்பிட்டல் கொண்டு போக, தவறான சிகிட்சையால் மரணம், ஈமை காரியங்கள் முடியும் வரை கூட இருந்தேன் கண்ணீருடன்......

அடுத்து எங்கள் "கிருபாசனம்" [[மும்பை, தாராவி]] சபையின் பாஸ்டரும், அப்போஸ்தலருமான  அய்யா குமாரதாஸ் அவர்களின் மரணம். இந்த தடவை நான் ஊர் [[இந்தியா]] வரக் காரணமே அவர்தான். காரணம் மும்பையில் எனக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்க அவர் உதவி செய்வதாக இருந்தது. வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவரை போயி பார்த்தேன், சரி நீ ஊர் போயி பணம் கொண்டுவா ஏற்பாடு செய்யலாம் என்றார்.

நான் ஊர்[[கன்னியாகுமரி]] வந்து பணம் ஏற்பாடு செய்யுமுன் அவர் சீரியஸாக ஆஸ்பத்திரியில், சரியாகிவிடும் என மும்பை வந்தேன் ஆனால், அவர் எனக்கு முந்தி  கொண்டார் ஆம் இறந்து போனார். எனக்காக பிரார்த்திக்கும் உயிர்களில் அவர் மிகவும் முக்கியமானவர், என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.


என்னோடு பஹ்ரைனில் வேலை செய்து, எனக்கு சாப்பாடெல்லாம் பொங்கி தந்து பிரியமாக இருந்து[[என் ஊர்காரன்]], நல்ல நண்பனாக இருந்து விசா பிரச்சினையால் எட்டு வருஷம் ஊர் போகாமல், அவுட் பாசில் ஊர் போனான் கண்ணன். ஊரில் மனைவியுடன் சிறு பிரச்சினை வரவே, மனைவியின் ஊரிலேயே தங்கினான்.

அப்படி இருக்கையில், எங்க [[சொந்த]] ஊருக்கு வருவதற்காக லெப்பை குடியிருப்பிலிருந்து பழவூர் [[நெல்லை]] பக்கம் பைபாஸ் சாலையில் பைக்கில் ஓவர் [[கடும் போதையாம்]] ஸ்பீடில் வந்து இன்னொரு பைக்கில் மோத, அதில் பின்னால் இருந்த பெண்ணுக்கு இடுப்பு முறிய, கண்ணன் அம்பதடி தூரம் தூக்கி வீசப்பட...

ஆஸ்பத்திரியில் நான்கு நாள் கிடந்து உயிரை விட்டுருக்கிறான். இரண்டு பெண் பிள்ளை வேறு இருக்கிறது, சரி, அந்த இடுப்பு முறிஞ்ச பெண் என்ன பாவம் செய்தாள்...? [[வாகன ஓட்டிகள் தன் உயிர் மட்டும் முக்கியமில்லை, அடுத்தவர் உயிருக்கும் நாம்தான் உத்திரவாதம்னு நினச்சி வண்டி ஓட்டுங்க]]

எத்தனையோ முறை நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை செய்வதுண்டு குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது இன்பமாகத்தான் இருக்கும், அதேவேளை நொடியில் இன்பம் மாறி துன்பம் சடுதியில் நேரும்னு, கேட்டாதானே....!!!


அடுத்தது நம்ம "உணவு உலகம்" ஆபீசர் அருமை நண்பர் சங்கரலிங்கம் அவர்களின் தாயாரின் மரணம். ஏற்கனவே ஆஸ்பத்திரியில் வைத்து சரியாகி வீட்டுக்கு போயி, மறுபடியும் முடியாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி வச்சிருக்குறதா ஆபீசர் சொன்னார்.

அவர் குரலில் இருந்த வருத்தம் எனக்கும் புரிஞ்சது, அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் பேசுவார் போனில், அப்புறமா ரெண்டுநாள் கழித்து இம்சை அரசன் பாபு சாட் பண்ணி சொன்னார், இப்பிடி ஆபீசர் அம்மா இறந்து போனாங்க மனோ, நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லிருங்கன்னு, மனம் நொய்ந்து போனேன் தளர்ந்து போனேன்.

ஆபீசரோடு சந்தோசத்தில் பங்கு கொண்ட எனக்கு, துக்கத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என மனசுக்கு சங்கடமாக இருந்தது. நேற்றுதான் போன் பேசினேன் ஆபீசருக்கு, அவர் அவங்க அம்மா பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆச்சர்யமான விஷயம் சொன்னார் நம்பவே முடியவில்ல...!!!

நாப்பது வருஷத்துக்கு முன் காசி போயிருந்த போது ஆபிசரின் அப்பா, அம்மாவுக்கு வாங்கி குடுத்த "கண்ணாடி வளையல்" [[நோட் பண்ணிக்குங்க கண்ணாடி வளையல், அதுவும் நாப்பது வருஷம் முன்பு]] ஒன்று, இது வரை உடையலையாம்....!!! உடலை சிதை மூட்டுமுன் அந்த வளையலை கழற்றி இருக்கிறார்கள்,  அப்பவும் உடையலையாம்....!!! எவ்வளவு அன்பு இருந்திருந்தால் கண்ணாடி
வளையல்குள்ளும் பாசம் இருந்திருக்கும்  பாருங்க, அன்பு இருந்தா கண்ணாடிக்கு கூட உயிர் வந்துரும் இல்லையா.....?

ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா......??!!!

நான் இந்தியா பலமுறை லீவில் வந்திருந்தாலும், இந்த தடவைதான் ரொம்ப சந்தோசமாவும் இருந்தேன், இந்த தடவைதான் ரொம்ப துக்கமாவும் கவலையாகவும் திரும்பியும்  இருக்கேன். மறுபடியும், ஏ மரணமே உனக்கொரு மரணம் வராதா....?






http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger