நண்பனுக்கு ஒரு கவிதை.
உதிரத்தை பாலாக்கி
ஊனை உணவாக்கி
தந்தவளே....
ஊனை உணவாக்கி
தந்தவளே....
எப்போதும் முந்தானை
பிடித்து வரும் என்னை
ஒற்றையாய் விட்டுப் போனதென்ன....
யய்யா யய்யா என
அழைத்தவளே - இனி
அந்த சத்தம் என்று கேட்பேன்...
பொத்திப் பொத்தி
வளர்த்து என்னை ஆகாயத்தில் பறக்க
பழக்கி விட்டு ஓடி மறைந்து, விண்மீனாய் மாறினது என்ன....
உனது அன்பின் நேசத்திற்கு
நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!
நாற்பது வருஷமாய் நீ அணிந்திருந்த அந்த
ஒற்றை "கண்ணாடி"வளையலே சாட்சி.....!!!!
---------------------------------------------------------------------------
ஒரு முறை படகில் ஏறி, யமுனை
நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர்.
அது இரவு நேரம், படகிலே இருந்த சின்ன
அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர்
கவிதை எழுத முற்பட்டார்.
ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை…
பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி
விளையாடியது.
கடைசியில் சோர்ந்துபோன தாகூர், மெழுகுவர்த்தியை
அணைத்து விட்டார். மெழுவத்தியை அணைத்ததுதான்
தாமதம்.. .
நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக
ஒளிர்வது தொடர்ந்தது. இதைப் பார்த்ததும் தாகூருக்கு
கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்…?
ஒரு சின்ன மெழுகுவத்தி எப்படி நிலாவின் ஒளியையே
தாகூரின் கண்ணிலிருந்து மறைத்து விட்டதோ.
அதே மாதிரிதான் ஈகோ என்ற நிலா சந்தோஷத்தை
அது மறைத்து விடும்.
நன்றி : கல்யாண்ஜி.
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?