ஒரு நாள் ஒரு மனிதன் உணவு விடுதியில் குழம்பி யருந்திவிட்டு வெளியே வந்தான்.ஒரு வேறுபாடான சவ ஊர்வலம் அவன் கவனத்தைக் கவர்ந்தது.
ஒரு சவப்பெட்டியைப் பின் தொடர்ந்து ,50 அடி இடை வெளியில் மற்றோர் சவப் பெட்டியும்,அதன்பின் நாயுடன் செல்லும் ஒரு மனிதனையும் கண்டான்.அந்த மனிதனுக்குப் பின் சுமார் 200 ஆண்கள் ஒருவர் பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர்.
அவனது ஆர்வத்தை அவனால் அடக்க இயலவில்லை.
நாயுடன் செல்லும் மனிதனை அணுகிக் கேட்டான்."உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். ஆனால் இது போல் ஒரு ஊர்வலத்தை நான் பார்த்தே இல்லை. இறந்தது யார்?"
மற்றவன் சொன்னான்" முதல் பெட்டியில் என் மனைவி"
"என்ன நடந்தது.?" எனக் கேட்டான்.
அவன் சொன்னான்" என் நாய் அவளைத் தாக்கிக் கடித்துக் கொன்று விட்டது"
இவன் அதிர்ச்சியடைந்தான்.கேட்டான்"அந்த இரண்டாவது பெட்டியில்….?"
"என் மாமியார்;தன் மகளைக் காப்பாற்ற முயன்றார். அவரையும் என் நாய் கடித்துக் கொன்று விட்டது"
இவன் சிறிது நேரம் யோசித்தான்.பின் கேட்டான் "உங்கள் நாயை எனக்கு ஒரு நாள் கடனாகத் தர இயலுமா?"
அவன் சொன்னான் "வரிசையில் வா!!"
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?