அண்ணா ஹசாரே பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், ஊடகங்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கும் போனால் போகிறது என சற்று இடம் ஒதுக்க ஆரம்பித்துள்ளன. தூக்கு தண்டனை என்பது , மேலோட்டமாக அலச வேண்டிய பிரச்சினை அல்ல , பொழுது போக்கு பிரச்சினையும் அல்ல என்பதால், ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பதே நல்லது.
கொள்கை ரீதியாக சிலர் சில நிலைகளை எடுத்து இருந்தாலும், நடு நிலையாளர்கள் சிலருக்கு இதில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. ஆதரிப்பதா எதிர்ப்பதா என பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை..
அவர்கள் நலன் கருதி, இந்த பிரச்சினையில் நிலவும் மூன்று தரப்பு நியாயங்களை தொகுத்து தர விரும்புகிறேன்..
1 . தண்டனை கூடாது....
தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர் , பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். போதுமான தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூக்கு வழங்குவது தவறு. மேலும் அவர்கள் நிரபராதிகள். ஒரு பேட்டரி வாங்கி கொடுத்ததற்கு தூக்கு என்பது அக்கிரமம்.
2 விடுதலை கூடாது..
கொலை செய்வது மட்டும் அல்ல.. உடைந்தையாக இருப்பதும் குற்றமே... கொலை செய்ய கத்தி வாங்கி கொடுத்தால் , அதுவும் குற்றம் என்ற அடிப்படையில்தான் தண்டனை வழங்க்கப்ப்ட்டுள்ளது. தண்டனை காலதாமதம் ஆனதற்கு அடுத்தடுத்த அப்பீல்களே காரணம். எனவே இதை காரணம் காட்டி விடுதலை செய்ய சொல்வது தவறு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தூக்கு தண்டனை உண்டு. இதை கொடூரம் என நினைத்தால், எல்லா தண்டனையுமே கொடூரம்தான். பேசாமல் எல்லா தண்டனைகளையும் ஒழித்து விட்டு, நீதி மன்றங்களை அறிவுரை மையங்களாக்க முடியுமா? எனவே அவர்களை விடுதலை செய்ய கூடாது..
3. யாருக்குமே தூக்கு கூடாது..
பேட்டரி வாங்கி கொடுத்தது குற்றமா இல்லையா என்பது தேவை இல்லாத வாதம். தூக்கு தண்டனை ஒட்டு மொத்தமாக ஒழிய வேண்டும். ஆட்டோ சங்கர் உட்பட பொதும்க்களை கொல்லும் தீவிரவாதிகள் உட்பட யாருக்குமே தூக்கு கூடாது.. வேறு கடுமையான தண்டனை தரலாம். அமெரிக்காவில் கூட தூக்கு தண்டனையில் சிக்குபவர்கள் ஏழைகள்தான். எனவே இந்த தண்டனை அப்பாவிகளையே பாதிக்கிறது..
இப்படி மூன்று வித கருத்துக்கள் நிலவுகின்றன.. உங்கள் கருத்து என்ன?

http://worldnews24by2.blogspot.com
http://worldnews24by2.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?