நான் ஆகஸ்டு 2008 இல் இப்பதிவை ஆரம்பித்தேன்.என் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற நோக்கில்,ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் ஆத்ம திருப்தி ஒன்றே என் நோக்கமாக இருந்தது.தமிழ் மணத்தில் மட்டும் இணைத் திருந்தேன்.பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.ஓட்டுப் போடும் முறை அப்போது இருந்ததா எனத் தெரியாது.இருந்திருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.எழுதுவது ஒன்றே என் நோக்கமாக இருந்தது.
எப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் எழுந்ததோ அப்போதெல்லாம் எழுதினேன்.எதையாவது எழுதித் தீர வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை.வாசகர் வருகை பற்றிக் கவலை அடைந்ததில்லை.2008 இல் 26 பதிவுகள்,2009 இல் 22 பதிவுகள், 2010 செப்டெம்பர் வரை 6 பதிவுகள்-அவ்வளவே.
2010 நவம்பரில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.வருகைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.பின்னூட்டங்களை எதிர் நோக்கத் தொடங்கினேன்.அதிக அளவு பின்னூட்டங்கள்- வராத போது,நவம்பர் 18 இல்" உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும் "என்ற நகைச்சுவைப் பதிவு எழுதினேன் .சில பதிவர்கள் விளக்கம் அளித்தார்கள்.அதில் முதல் பின்னூட்டம் அளித்தவர் LK அவர்கள்.அதன் பின் பல பதிவுகளுக்கும் சென்று படித்து என்ன நடக்கிறது எனக் கவனித்தேன். அதன் விளைவே நவ.21 தேதியிட்ட என் பதிவு " உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2).
அப்போது முடிவு செய்தேன்,சில இலக்குகளை எட்ட வேண்டும் என.அன்றைய நிலையில் வருகை எண்ணிக்கை சுமார் 4500 ஆக இருந்தது.தமிழ் மணம் ரேங்க் தெரியாது-எங்கோ தொலை தூரத்தில் இருந்திருக்கும்.
பதிவை இண்ட்லி,தமிழ் 10,உலவு,திரட்டி,தமிழ்வெளி ஆகியவற்றில் இணத்தேன். ஓட்டுப் பட்டைகள் சேர்த்தேன். எழுதத் தொடங்கினேன். உண்மையாகச் சொல்வ தென்றால் பந்தயத்தில் ஓடத் துவங்கினேன்!
இன்று வருகை எண்ணிக்கை 41400 த்தைத் தாண்டி விட்டது.தமிழ் மணம் டிராஃபிக் ரேங்க் 50.(அதுதான் என் லிமிட் போலிருக்கிறது!).இந்த வாரம் தமிழ்மணம் டாப் 20 யில் நான்காம் இடத்தில் இருக்கிறேன்.இந்த ஆண்டு இது வரை 125 இடுகைகள்!
I have proved a point to myself.
இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம்.
இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!
எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன்.
உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.
எழுத வேண்டும் என்ற அரிப்பு ஏற்படும்போது எழுதுவேன்.
ஆத்ம திருப்திக்காக எழுதுவேன்.
எனக்காக எழுதுவேன்;உங்களுக்காக எழுதுவேன்.
ஆனால் ஹிட்டுக்காக எழுத மாட்டேன்.
ஓட்டுக்காக எழுத மாட்டேன்.
இந்த ஓட்டத்தில் என் மற்றப் பதிவை அலட்சியம் செய்து விட்டேன்.இனி அங்கும் எழுத வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்றுதான்!ஆயினும் அதிலும் கொஞ்சம் அதிகப் பிரியம் ஒருவரிடம் இருக்கும்.
எனக்கு என் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும்.(எனக்கே பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?!)
இது வரை எழுதியவற்றில் எனக்குப் பிடித்த சில பழைய பதிவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை மீள் பதிவாக அளிக்கப் போகிறேன்.
படித்துப்பாருங்கள் நேரம் இருந்தால்!
http://blackinspire.blogspot.com
http://blackinspire.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?