௧ : பேப்பரில் ஸ்டேப்ளர் பின் அடிக்குமுன், நம் கை ஏன் முதலில் ஸ்டேப்ளர் இல்லாமலேயே ஆக்ஷன் செய்கிறது...?
௨ : சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
௩ : நடிகைகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் எது என கேட்கும் போது, விலைமாதுவாக நடிக்க ஆசை எனக் கூறும் விந்தை என்ன...!!??
௪ : சிறு பெண் குழந்தைகள், எது வாங்கினாலும் பிங்க் கலரை பார்த்து கேட்பது ஏன்...!!??
௫ : "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??
௬ : பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??
௭ : மூணாவது ரவுண்ட் மது அருந்திவிட்டு, பீரோ சாவியை ஒளித்து வைத்துவிட்டு, அடுத்தநாள் மறந்து போயி, தேடோ தேடுன்னு தேடிட்டு வெறுத்து போயி, அடுத்தநாள் மூணாவது ரவுண்டு மது குடித்ததும், ஆங்....
இங்கேதான் சாவியை வைத்தோம் என சரியாக கண்டுபிடிப்பத்தின் மாயம் என்ன..!!!??
௮ : டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன...!!??
௯ : முதலாளி போன் செய்யும் போது, தொண்டையை செருமிட்டே, தலையை அப்பிடிக்கா இப்பிடிக்கா ஆட்டிகிட்டு போனை எடுத்து பேசுவது என்ன...!!!??
௧௦ : முக்கியமான பதிவு போடும் அன்றைக்கு நெட் பெப்பே காட்டும் மர்மம் [[வேதனை]] என்ன...!!??
௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
௧௨ : கவிதை பிடிக்காத நண்பர்கள், ஏன்....!!!??
௧௩ : சாயங்காலம் மது அருந்த போறவன், சென்ட், பவுடர் பூசிட்டு போயி, குடிச்சிட்டு வரும்போது, வேஷ்டி இல்லாமல் வருவது ஏன்...!!??
௧௪ : சோனியா காந்தி [[ப்பூப்ப் காந்தி பரம்பரை]] இப்போவெல்லாம் பேசுவதே இல்லையே ஏன்....!!??
௧௫ : மூனா கானா, தமிழக மக்களை சாபம் போடுறாரே அது ஏன்...!!!??
௧௬ : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??
௧௭ : அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??
௧௮ : அண்ணா ஹசாரே'வுக்கு ஆதரவாக திரண்ட மக்களை பார்த்து, அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறாரே எப்பிடி...!!!??
௧௯ : ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??
௨௦ : கையில் புது மோதிரம் போட்டது, எல்லாரும் கையை உயர்த்தி உயர்த்தி பேசுவது ஏன்...!!??
டிஸ்கி : எவம்லெய் அது மேலே உள்ளதை படிச்சிட்டு கல்லை தூக்குறது, ம்ஹும்....
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?