கடல் தாண்டி வந்தியா
ஆசாபாசங்களை
பெட்டியில் வைத்துப் பூட்டு....
பிரிவின் மனவலியை
மறைத்து வைத்து
இன்முகம் காட்டு...
கண்ணில் சுரக்கும்
கண்ணீரை அடிக்கடி
பாத்ரூம் போயி கழுவு...
கைபேசியில் ஒப்பாரி வைக்கும்
மனைவிக்கும் குழந்தைக்கும்
பயந்து ஒளியும் கைபேசி...
நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
இன்னும் கூடுதலாக
மனம் அழுகிறது...
காலம் கோலம்
எது மாறினாலும்
முதலாளிகள் மாறப்போவதில்லை...
கண்ணீரை நெகிழ்ந்து
கதறலை அமிழ்ந்து
மனதை ஒளித்து வைத்துக்கொள்...
இந்த கண்ணீருக்கு
மட்டும் ஒரு
சங்கம் இல்லை....
இருந்தால் உலகம்
தாங்காது எனவேதான்
ஞானிகள் யாரும் யோசிக்கவில்லை...
ஏ சமுத்திரமே
எத்தனை முறைதான் உன்னை
கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
கண்ணீர் பழகிவிட்டது
பிரிவுகள் வழக்கமாகி விட்டது
பாஸ்போர்ட், விசா இல்லாத
உலகம் வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!
டிஸ்கி : படங்கள் யாவும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மேலிருந்து எடுத்தது.
http://sirappupaarvai.blogspot.com
http://sirappupaarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?