மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.
செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.
பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.
தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.
செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது.
எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் 'அதை' மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.
http://tamil-photo.blogspot.com
http://tamil-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?