நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற 28 ந் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது. இது குறித்து விஜய்யின் தந்தையும், பொருளாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விஜய் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பெரிய விழா நடந்தது. இந்த மாதம் 28 ந் தேதி மதுரையில் தெண்டரணி தலைவர் மகேஸ்வரன் முயற்சியில், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கான இடத்தேர்வு முடிந்து, புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் விழா நடக்க உள்ளது.
நடிகர் விஜய் 92 ல் நடிக்க வந்தார். அப்போது ரசிகர் மன்றமாக ஆரம்பித்து, நற்பணி இயக்கமாக உருவாகி, தற்போது மக்கள் இயக்கமாக மாறி ஒரு சமூக இயக்கமாக செயல்படுகிறது. இந்த இயக்கம் ஏழை மக்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.
விஜய்க்கு நடிகர் எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். நடிகனாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராகி இன்றும் அவரை வாழ்க்கை முடியாமல் உள்ளது. அவர் மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.
எனவே அவரை ஒரு ரோல் மாடலாக வைத்து தான் இது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?