இயற்கையே...
உன்னிடம் உள்ள சிறந்த மூங்கில் கொண்டு
என் மகளுக்கு இன்னிசை பாடு...
அவளின் கனவுகள் முடிவின்றி நீளட்டும்..
உச்சி வானத்து சூரியனே.,
இரவின் நிலவிடம் குளுமையை
கடன் வாங்கி.,
உன் வெப்பத்தின் வேகத்தை குறைத்துக்கொள்...
என் தேவதை கண் உறங்குகிறாள்..
என் இதயம் போல
வெண்மை காட்டி,
சிலிர்த்திடும் பறவைகளே
உங்கள் இறக்கைகளின் வேகங்களை
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்..
என் இளவல் தூங்குகிறாள்.
இப்படியாய்...
இன்னுமாய்..
இயற்கையிடம் மட்டுமல்லாது
செயற்கை மனிதர்களிடமும்
என் குழந்தைக்காக வேண்டிக்கொள்ள
ஏ... இரக்கமற்ற இறைவா
எனக்கொரு குழந்தை வரம் கொடு...
கவிதையாக்கம்:
க.ரேணுகா.
டிஸ்கி:
ரேணுகாவின் கவிதைக்கான பின்னூட்டம்; இந்த பதிவுக்கான தலைப்பாகி விட்டதால், பின்னூட்டமாக கவிதைக்கான தலைப்பை தர முடியுமா உங்களால்..
http://snipgallery.blogspot.com
http://snipgallery.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?