வாலாஜாபாத் அடுத்த அவலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (25). இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
தினமும் அவர் வேலைக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சுங்குவார்சத்திரம் சோகண்டி கிராமத்தை சேர்ந்த சுமதி (22) என்பவரை அடிக்கடி சந்தித்தார்.
இதையடுத்து சுமதியை, லோகநாதன் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தார். பலமுறை அவரிடம் காதலை கூறியும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுமதி மீது லோகநாதன் கோபத்தில் இருந்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த சுமதியை வழிமறித்த லோக நாதன் மீண்டும் தனது காதலை கூறி ஏற்குமாறு தெரிவித்தார்.அப்போது சுமதி அவரை கண்டித்தார்.
ஆத்திரம் அடைந்த லோகநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்தார்.பின்னர் தலை மார்பில் குத்தி விட்டு தப்பி ஓடவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே மயங்கி விழுந்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிபு செய்து லோக நாதனை கைது செய்தனர்.
http://dinasarinews.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?