மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால், இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் மறைய வாய்ப்புள்ளது," என மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.
உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேவை, ஊழல்வாதிகள் நிறைந்த திகார் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதித்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும். தமிழர்களை வஞ்சிக்க, காங்., கம்யூ.,கள் கேரளாவில் இணைகின்றன. இங்கும் அது நடக்க வேண்டும். மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும். கேரளா உதவ மறுத்தால், அவர்களுக்கு பொருள் செல்லும் கம்பம் மெட்டு, போடி மெட்டு, களியக்காவிளை ரோடுகள் பெயர்க்கப்படும். தமிழகத்திற்கு மத்தியஅரசின் துரோகம் தொடர்ந்தால், நூற்றாண்டு சுதந்திரம் காணும் போது, இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் விடுபட நேரிடும், என்றார்.
பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க., அவைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், நகர் செயலாளர்
பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நான்காம் பகுதி செயலாளர் ரஞ்சித்குமார், ஐந்தாம் பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு
செய்தார்.
அய்யோ… பாவம் தி.மு.க.,! : கேரளா விவகாரத்தில் தி.மு.க., விளைத்த துரோகம் அதிகம். நொந்து, வெந்து போய்; அய்யோ… பாவம் என்ற கதியில் நிராயுதபாணியாக நிற்பவர்களை நாம் விமர்ச்சிக்க வேண்டாம். என் போராட்ட பின்னணியில் ஓட்டு வேட்கை இல்லை. தமிழக உரிமையை மீட்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு ம.தி.மு.க., துணை நிற்கும். இதை கூட்டணிக்கு தூதாக யாரும் நினைக்க வேண்டாம். பலன் எதிர்பாராமல் தமிழகத்தை நேசிக்கிறோம், ஆதரவு கொடுங்கள், என வைகோ உருக்கமாக பேசினார்.
http://youngsworld7.blogspot.com
http://youngsworld7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?