இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என்று தமிழக முதலமைச்சருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகள் இந்த அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.
இந்த மூவரும் விண்ணப்பித்திருந்த கருணை மனுக்களை அண்மையில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நிராகரித்திருந்தார். இதனையடுத்து குறித்த மூவரையும் தூக்கிலிட ஆளுநரின் உத்தரவு எதிர்ப்பார்க்கப்படுவதாக தமிழக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை அமர்வு நேற்று இடம்பெற்ற போது இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தநிலையில் தூக்குத்தண்டனை விதிக்கப்படவுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் மன்னிப்பு தொடர்பில் தமிழக முதல்வர் தலையிடவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கோரியுள்ளார்.
இதனை தவிர குறித்த மூவர் மீதான தண்டனையை மத்திய அரசாங்கம் ரத்துச்செய்யவேண்டும் என்று தமிழக சட்டசபையில் திர்மானம் நிறைவேற்றப்படவேண்டு;ம் என்று பெரியார் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய அமைப்புகள் ஜெயலலிதாவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஏற்கனவே 1974 ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்;ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கப்பட்டமையை பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,பெங்களுரை சேர்ந்த அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் போல் நியூமன், தமது தீர்ப்புப்படி தூக்குத்தண்டனை பெற்றவர்கள் மூவரும் அப்பாவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இடுப்புபட்டியில் பொருத்தப்பட்ட குண்டுக்காக இரண்டு பற்றரிகளை பெற்றுக்கொடுத்த அப்போது 19 வயதான பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை வழங்குவது எவ்வாறு நியாயப்படும் என்று நாம் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரியுள்ளார்.
http://tamil-joke-sms.blogspot.com
http://tamil-joke-sms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?