போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார். காலை 10 மணி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அன்னா ஹஸாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்றுகாலை ஏழரை மணியளவில் ஹஸாரே கைது செய்யப்பட்டு போலீஸ் மெஸ்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அன்னா ஹஸாரே குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தண்ணீர் கூட அவர் குடிக்காமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்றார் அவர்.
இது 2வது சுதந்திரப் போராட்டம்-அன்னா ஆவேசம்
இதற்கிடையே போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிரான போராட்டம் இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டத்திற்கான தொடக்கம் என்று வர்ணித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பேசுகையில், எனது அருமை மக்களே, இது இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கம். இப்போது நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால் எனது இயக்கத்தை, நமது மக்களின் இயக்கத்தை யாராலும் கைது செய்ய முடியாது, நிறுத்த முடியாது. அதை நிறுத்தவும் நீங்கள் அனுமதிக்காதீர்கள். உங்களது போராட்டத்தைத் தொடருங்கள். அனைவரும் இணைந்து போராடுங்கள். சிறைகளை நிரப்புங்கள்.
வன்முறைக்கு இடம் கொடுக்காமல், அனைவரும் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும். பொறுமையுடன் போராட வேண்டும். நீங்களும், உங்களுடன் பலரையும் இணைத்துக் கொண்டு போராடுங்கள்.
வன்முறையில்யாரும் ஈடுபட வேண்டாம். முற்றிலும் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அன்னா.

http://worldnews24by2.blogspot.com
http://worldnews24by2.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?