என் இசை மக்களுக்கானது. அவர்களின் மகிழ்ச்சிதான் இந்த இசையின் முதல் நோக்கம் என்றார் இசைஞானி இளையராஜா.
இளையராஜா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ஸ்ரீராம ராஜ்யம். இந்தப் படத்தை பாபு இயக்கியுள்ளார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ் வால்மீகியாகவும், பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ராமாயண காவியத்தின் உத்தரகாண்டத்தை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ராவணனை வதம் செய்த பிறகு, ராமரின் ஆட்சிக் காலம் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள ஸ்ரீராமராஜ்யத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இளையராஜாவின் இசை அமைந்துள்ளது. மொத்தம் 16 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீசீதா ராமச்சந்திர சுவாமி கோயில் அமைந்துள்ள பத்ராச்சலம் நகரில் இந்தப் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
இசைஞானி இளையராஜா, அக்கினேனி நாகேஸ்வரராவ், பாலகிருஷ்ணா, நயன்தாரா உள்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இளையராஜா தெலுங்கில் பேசினார். அவர் கூறுகையில், "இந்தப் படம் மிக முக்கியமான ஒன்று. என் இசை கடவுளுக்கானது என்று சொல்லமாட்டேன். இந்த இசை மக்களுக்கானது. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இசையை உருவாக்கித் தருகிறேன். மக்கள் சந்தோஷமாக இருந்தால், இறைவன் சந்தோஷப்படுவான். இசையை விளக்குவது கஷ்டம். அனுபவிப்பது ஆனந்தம்.
இந்தப் படத்துக்கு மிகச் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார் ஜோன்னவிட்டலு. அவருக்கு என் நன்றி.
இந்த விழாவுக்கு வந்துள்ள அக்கினேனி நாகேஸ்வரராவைப் பார்க்கும்போது எனக்கு பழைய நினைவுகள். நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் படம் லைலா மஜ்னுவை எங்க ஊர் டெண்ட் கொட்டகையில் பார்த்து ரசித்தவன். அவர் படத்தில் மீண்டும் பணியாற்றியது சந்தோஷமாக உள்ளது.
இந்த ஸ்ரீராமராஜ்யம் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்," என்றார்.
விழாவில் பேசிய நாகேஸ்வரராவ், "கவர்ச்சி பிகினி ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், இந்த வயதில் வால்மீகி வேடத்தில் நாம் நடிக்க வேண்டுமா என யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்துக்கு இளையராஜா அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். அவருக்கு என நன்றிகள்," என்றார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?