யாழ்.மாவட்டத்தில் இளவயது கர்ப்பந்தரித்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த மாவட்டத்தின் சுகாதாரப் பணிமனை தெரிவிக்கிறது.
யாழ். குடாநாட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 211 இள வயதினரும்; திருமணமாகாத பெண்கள் 69 பேரும் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த ஐந்து மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. யாழ். மாவட்ட சுகாதார பணிமனையின் தாய்சேய் நல வைத்திய அதிகாரி திருமதி.தி.சிவசங்கர், கலாசார சீர்கேடுகள் குறித்து தமது கவலையையும் வெளியிட்டார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?