எனக்கு விஷாலை ரொம்ப பிடிக்கும்; நடிகர் விக்ரமை காதலிக்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத்திருமகள் அவரை, இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது. அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன், என்றார்.
விஷால் பற்றி கூறுகையில், நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார், என்று பாராட்டியிருக்கிறார்.
விக்ரம், விஷாலை புகழ்ந்து தள்ளிய ஸ்ரேயா, நடிகைர் ஜீவாவையும் விட்டு வைக்கவில்லை. என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா. அவர் நடித்த கோ படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார், என்று ஐஸ் வைத்திருக்கிறார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?