தனுஷுடன் 'மயக்கம் என்ன' படத்தில் நடித்து வந்தார் ரிச்சா. இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதால் சிம்புவுடன் நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் நடிக்க மைசூர் கிளம்பி போய் விட்டார்.
இந்த இரண்டு படங்கள் குறித்தும் தனது டிவிட்டர் இணையத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ரிச்சா. அவர் கூறியிருப்பது :
" செல்வராகவன் சார்.. 'மயக்கம் என்ன?' படத்தை அனைத்து மொழிகளிலும் ரீமேக செய்வீர்களா.. அதே நாயகியுடன்.?!
இரவு 12 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தாலும் அடுத்த நாள் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு இருக்கும். எவ்வளவு நேரம் நான் நடித்தாலும் டயர்ட் ஆனது இல்லை. ஏனென்றால் 'மயக்கம் என்ன' படக்குழுவினர் அவ்வாறு நடந்து கொண்டார்கள்.
முதன் முதலாக இப்படத்திற்காக ஸ்கூட்டி பைக் ஒட்டி இருக்கிறேன். MIRAPAKAAY தெலுங்கு படத்தில் நான் ஒட்டினேன் ஆனால் அது கிராபிக்ஸ். மயக்கம் என்ன படத்திற்காக நிஜத்தில் ஒட்டி இருக்கிறேன்.
தற்போது படப்பிடிப்பு அனைத்து முடிந்து சிம்புவுடன் நடிக்கும் 'ஒஸ்தி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள மைசூரில் இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தமிழில் முன்னணி நடிகர்களான சிம்பு, தனுஷ் என இருவருடன் நடித்து வருவதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரிச்சா.
http://worldnews24by2.blogspot.com
http://worldnews24by2.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?