ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருகிறது. இதை ஆயுள் தண்டனையாக குறைக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் தூக்கிலிட போவதை அறிந்து மன வருத்தம் அடைந்தேன். அநியாயமாக கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியும் இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாக கூறினார். ஆனால் தற்போது இவர்களைத் தூக்கிலிடலாம் என்று குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளது வருத்தம் தருகிறது.
இவர்களின் உயிரை காக்க தண்டனை குறைப்பு நடவடிக்கை எடுக்க தங்களை வேண்டுகிறேன். இந்த மனிதநேய செயலுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பர் என்று கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.
http://devadiyal.blogspot.com
http://devadiyal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?