ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் தண்டனையை நிறுத்தக் கோரி, புதிய தமிழகம் கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் தங்களது உடல் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற பாலு, புவனா மற்றும் கோபி உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?