Monday, 29 August 2011

ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -2



அந்த சந்திப்பு நடந்த இடம் முழுதும் , உற்சாக மின்சாரம் செலுத்தப்பட்டது போல குதூகல மன நிலையில் இருந்தது. அதே நேரத்தில் அனைத்தும் சிறப்பாக , கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.. பழங்கள்,  நன்னாரி சர்பத் என அவ்வபோது ஏதாவது கிடைத்து கொண்டு இருந்தன.. இதற்கு உழைத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... இலக்கியம் மனிதனை எப்படி பண்படுத்துகிறது என்பதற்கு இந்த நிக்ழ்வே ஒரு சாட்சியாக இருந்தது..

  இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. மதிய உணவு முடிந்த பின், ஜாலியாக சற்று நேரம் சுற்றிக்கொண்டு இருந்தேன்...அப்போது, ஏதோ பேச்சு குரல் கேட்கவே, பார்த்தேன்,,, சாரு அங்கு இருந்த ஒரு நாய் குட்டியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. ஆம்... பேசினார்...

வழக்கமாக நாயை கொஞ்சுவோமே, அப்படி இல்லாமல் ஒரு மனிதனிடம் பேசுவது போல , " எப்ப்டி இருக்கிறாய்? சாப்பிட்டு விட்டாயா? பசிக்குமே! " என அக்கறையுடன் கேட்பதை பார்த்து, வியந்து போனேன்... ( சற்று நேரத்திற்கெல்லாம் வயிறார சாப்பிட்டு விட்டு, சோஃபாவில் உறங்கியது அது...எனக்கு உட்கார இடம் இல்லை... அதற்கு தனி இருக்கை .. பொறாமையாக இருந்தது )

அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, சாரு மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருந்தது...



சிலருக்கு " தண்ணியில் " மிதப்பது பிடிக்கும், சிலருக்கு நீச்சல் குளத்தில் மிதப்பது பிடிக்கும், அதே போல நடனம் , இலக்கிய விவாதம் , வாசித்தல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை..  இந்த அனைத்தும் ஒரே இடத்தில் நடந்தது அற்புதமாக இருந்தது...  be yourself என்பதன் மகத்துவம்  
வெளிப்பட்ட இடம் அது....

அரசியல், சினிமா, மது, ஆன்மீகம், துரோகம் , காதல், காமம் என வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்து விஷயங்களும் சுவையாக விவாதிக்கப்பட்டன... ஆழமான கேள்விகள் முதல் அபத்தமான கேள்விகள் வரை எதுவாக இருந்தாலும், பளிச் பதில் அளித்தார் அல்ட்டிமேட் ரைட்டர்.

புக் ஸ்டால்  வைக்கப்பட்டு இருந்தது பயனுள்ளதாக இருந்தது... அதே நேரத்தில் வாசக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததும் இனிமையான அனுப்வம்...  

சரி... சாருவுடன் உரையாடலில் சில பகுதிகள்..

**********************************************************************
 உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்தது ராசலீலா.. ஒரு வாசகனாக , உங்கள் பிடித்த உங்கள் நாவல் எது?

முந்தா நாள் வரை எனக்கு பிடித்த நாவல் ராச லீலா.. ஆனால் நேற்று முதல் , எக்சைல் நாவல் மிகவும் பிடித்து விட்டது... என்னையே பிரமிக்க செய்யும் அளவுக்கு சிறப்பாக வந்து இருக்கிறது நாவல்... ஒரு வகையில், சீரோ டிகிரியின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம்... பல விஷ்யங்களை தொட்டு செல்கிறது நாவல்.. படித்தவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீள்வது கடினம்..

வாழ்க்கை என்பது என்ன?

வாழ்க்கை என்றால் என்ன..இலக்கியம் என்றால் என்ன..கவிதை என்றால் என்ன என்றெல்லாம் ரெடிமேட் கேள்விகள் கேட்பதால் பயனில்லை... வாழ்க்கை என்றால் என்பது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..

எழுத்தாளன் ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

நிறைய படிக்க வேண்டும்.. உலக சினிமா பார்க்க வேண்டும்.. எல்லாவற்றுகும் மேலாக மனதில் அன்பு இருக்க வேண்டும்.ஈகோ இருக்க கூடாது.... ஒருவரை துன்புறுத்துபவர் எழுத்தாள்ராக இருக்க முடியாது... எழுத்தாளன் என்பது ஒரு நிலை... டைரகடர் ஆவது எப்படி என சொல்லி தருவது போல , எழுத்தாளன் ஆவது எப்படி என சொல்லித்தர முடியாது..துறவி ஆவது எப்படி என சொல்லித்தர முடியுமா?

இது வரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு தோன்றுவது என்ன?


பல தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறேன்.. ஆனால் அதற்காக அழுவதில்லை.. எல்லாமே அனுபவம்தான்... செஸ் ஆட்டத்தில் , சரியான மூவ் தவறான் மூவ் இரண்டும் சேர்ந்துதான் ஆட்டத்தை உருவாக்குகின்றன...எனவே மூவ்தான் முக்கியம்... ஆட்டத்தில் இருப்பது முக்கியம்... 

என் தந்தை ஒவ்வொரு வருடமும் சபரி மலை செல்வார்.. ஏன் என கேட்டால் , நீ சின்ன பையன் சொன்னால் புரியாது என்பார். நீங்கள் சொல்லுங்கள் .. சபரிமலை ஏன்?

அய்யப்பன் என்பவன் என்னைபோன்றவன் என நண்பர் ஒருவர் சொன்னார்.. என் எழுத்துக்கள் பற்றி தெரியாதவன் பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை.. ஆனால் என் எழுத்தைப்படித்து விட்டு , புரிந்து கொள்ளாமல் தவ்றாக பேசினால் எனக்கு கோபம் வரும். அதே போல அய்யப்பன் என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பற்றி அய்யபனுக்கு கவலை இல்லை.. ஆனால் அய்யப்ப பக்தராக காட்டிகொண்டு, தவ்று செய்தால் அய்யப்பன் சும்மா விட மாட்டான் என சொல்லி சில உதாரணங்கள் சொன்னார் நண்பர்..

என்னை பொறுத்தவரை , நான் ஒரு நான் வெஜ் அடிக்ட் ... பைபாஸ் சிகிச்சை நடந்து , அசைவம் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அசைவம் சாப்பிட்டவன் நான்.. என்னை எந்த கொம்ப்னாலும் மாற்ற முடியாது... அப்படிப்பட்ட என்னை , ஒழுங்கு தவறாமல் விரதம் இருக்க வைத்தது இந்த வழிபாட்டு முறைதான்.. மனதாலும் கூட விதிமுறை தவறாமல்  விரதம் இருந்தேன்... விரத காலத்தில் என்னை சாமியாக மதித்து காலில் விழுவார்கள்..  அதற்கு உரியவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியை , இது ஏற்படுத்தியது... இது வேறு எந்த வழிபாட்டு முரையிலும் இல்லை... 

சில தீவிரவாதிகள் எதிரி சிறுவர்களை கொல்லும்போது, அவர்களுக்கு செக்ஸ் அனுபவம் இருக்கிறதா என கேட்பார்கள்.. பதில் என்னவாக இருந்தாலும் கொல்வார்கள்... ஆனால் அந்த அனுப்வம் இல்லாமல் ஒருவனை கொல்லும்போது, ஒரு சாடிஸ்டிக் மகிழ்ச்சி கிடைக்கும்.. ஒரு முக்கியாமன் அனுபவம் இல்லாமலேயே சாகிறான்..
அதே போல , சபரிமலை பயணம் என்பது அற்புதமான அனுப்வம்... அது இல்லாமல் சாவது பரிதாபத்துக்கு உரியது..

சீரோ டிகிரியை எப்படி படிப்பது?

நியாயமாக ஓர் எழுத்தாளன் இதற்கு பதில் சொல்ல கூடாது.. எப்படி படிக்க வேண்டும் என அதிலேயெ குறிப்புகள்  ஆங்காங்கு இருக்கின்றன.. 
உலகம் என்பது வன்முறைமயமானது.. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகம் ஏன் இவ்வள்வு கொடூரமாக இருக்கிறது... நான் ஏன் இவ்வளவு கொடுமைக்காரனாக இருக்கிறேன்... என் நாக்கு ருசிக்காக ஏன் ஒரு அப்பாவி விலங்கை கொல்கிறேன்..  இது போன்ற கேள்விகள் அதில் அலசப்பட்டு இருக்கும்..

சீரோ என்பது மரணம்... சூன்யம்.. மரணத்தின் இன்னொரு துருவம் செக்ஸ்.. செக்ஸ் இல்லாவிட்டால் ஃபேஷன் டெக்னாலஜி உட்பட எதுவும் இல்லை. இது போன்று  சீரோ டிகிரியில் ஆங்காங்கு இருக்கும் குறிப்புகளை பிடித்து கொண்டு மேலே மேலே போய்க்கொண்டே இருக்கலாம்... எத்த்னை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.. 

சீரோ டிகிரியின் கடைசி வாக்கியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை சொல்லும்... ஆனால் அது " சொல்" என்று முடியும்... அமைதியை சொல்லும் வாக்கியம் சொல் என முடியும்..

சீரோ டிகிரியின் துவக்க வாக்கியம், உன்னோடு பேசி எத்தனை நாட்கள் ஆகின்றன என தொடங்கும்..

ஆரமப்ம பேச்சு, முடிவு சொல்... ஆதியிலே வார்த்தை இருந்தது என்பார்கள்.. இதுபோல பல அதில் புதைந்துள்ளன..தேடி கண்டு பிடியுங்கள்

********************************************************

நாஸ்திகனாக இருந்ததால் , சபரிமலையை இத்தனை நாள் தவற விட்டு விட்டேனே என வருந்தியதாக சாரு சொன்னார்... சாருவை பார்ப்பவர்கள், சில தவறான பிரச்சாரங்களால் , இத்தனை நாள் அவரை தவற விட்டு விட்டொமே என வருந்துவார்கள் என்பது உறுதி...






சுவாசிப்பு போல வாசிப்பும் அவசியம்



இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் இலக்கியம்

சீரோ டிகிரி- ஒருவிவாதம்


அன்பு இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியாது

வானமே உங்கள் எல்லை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்



http://thehotstills.blogspot.com




  • http://thehotstills.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger