பாரிசில் உள்ள மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோருவதோடு, தமிழகமெங்கும் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்களுக்கு, தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில், இக்கவனயீர்ப்பு போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரென்சு மொழியிலான தொடர் முழக்கங்கங்களையும், விளங்களையும் முன்னிறுத்தி இக்கவனயீர்ப்பு போராட்டத்தை மக்கள் பிரதிநிதி சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை விவகாரம் தொடர்பில், நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை, உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளிப்படுத்தியதோடு, உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
புலம்பெயர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், பிரான்சில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனுவொன்று கைளிக்கப்படவுள்ளதாக, துணை அமைச்சர் சிவகுருநாதன் சுதர்சன் அவர்கள் தெரிவித்தார்.
மூவரது மரண தண்டனையை நிறுத்தும் நோக்கிலான தொடர் செயற்பாடுகளை, உரியவழிமுறைகள் ஊடாக பிரான்சில் தொடர்சியாக முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் தீயினில் காவியமாகிய செல்வி.செங்கதிருக்கு வணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்வொன்று, நாளை செவ்வாய்கிழமை லாசப்பல் பகுதியில் மாலை 17மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்க மக்கள் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
http://girls-stills.blogspot.com
http://girls-stills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?