11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அருகே மறைமலைநகரில் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்றிரவு நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசுகையில், தனக்கு எதிரானவர்கள் எந்த நாட்டை ஆண்டாலும் அவர்களை அழிப்பதைக் குறியாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
சதாம் உசேனைக் கொன்றதும் இப்படித்தான். ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச சதி உள்ளது என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டபோதும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.
ஒருவேளை ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தாலும், அவர்கள் எப்போதும் கூட்டுச் சதி செய்வது கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் தலைமை எடுக்கும் முடிவு அவர்களின் முக்கிய நிர்வாகிகளுக்கே சில சமயங்களில் தெரியாது.
மாபெரும் தலைவரான ராஜீவ்காந்தியைக் கொல்லும்போது பேரறிவாளனிடம் பேட்டரி வாங்கித்தான் கொல்ல வேண்டுமா? விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இவர்களைத் தூக்கில் போடவேண்டிய அவசியம் இல்லை.
11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கருணை மனுவை இப்போது உடனடியாக நிராகரித்து பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போட வேண்டிய அவசியம் என்ன? எனவே 3 பேரின் உயிரைக் காப்பாற்ற வேலூர் சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?