ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் பேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், அவர்களைத் தனித் தனி செல்களில் அடைத்து வைத்திருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மரண வேதனை போல அனுபவித்து வருவதாகவும் அவர்களது வக்கீல் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.
தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில் மூன்று பேரையும் தனி அறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை யார் பார்க்க வந்தாலும் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கழிப்பிடம் சென்றாலும் கூட யாராவது சிலர் கண்காணித்தபடி உள்ளனராம்.
நேற்று மூவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மூவரும் உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நேற்று மூன்று பேரையும் வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய வக்கீல்கள் குழு சந்தித்துப் பேசியது. பின்னர் இந்த சந்திப்பு குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்,
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்காக ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் தனித்தனியாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.
மூன்று பேரையும் 10-க்கு 10 அறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். இது மரண தண்டனையை விட மோசமானதாக இருப்பதாக பேரறிவாளன் தெரிவித்தார். மேலும் அவர்களைக் கண்காணிக்க 40க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி டோக்ராவுக்கு பேரறிவாளவன் கடிதம் எழுதியுள்ளார்.
போலீஸாரின் இந்த செயல் தனக்கு பெரும் மரண வேதனையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும், மரண வேதனையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது உயிருக்கு ஏதாவது ஊறு ஏற்பட்டால் அதற்கு போலீஸார்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறை போலீஸார் தவிர உளவுத்துறையினரும் அவ்வப்போது வந்து விசாரணை என்ற பெயரில் மூ்வரையும் மேலும் வேதனைப்படுத்துகின்றனர் என்றார் ராஜீவ் காந்தி.
http://tamil-vaanam.blogspot.com
http://tamil-vaanam.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?