Monday, 29 August 2011

ஜென் குருவுடன் ச���ல மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -1



இலக்கிய சந்திப்பு என்றால் டிரையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, ஈசிஆரில் அல்ட்டி மேட் ரைட்டர் பங்கு பெறும் இலக்கிய சந்திப்பு என்ற போதே சற்று ஆச்சரியமாக இருந்தது...ஆனால் அடுத்தடுத்து பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என முதலில் தெரியவில்லை..

 நான் செல்வதற்குள், துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடுகளை முடித்து இருந்தார்கள்.. சிலரை முதன்முறையாக சந்த்திக்கிறேன்.. ஆனாலும் பல நாள் பழகியவர்களை சந்திப்பது போலவே இருந்தது... சுரேஷ், மணிவண்ணன், ஞானசேகரன், பாலா, பிரபாகரன், சிவம் , சிபி, செல்வம் மாணிக்கம், மணிகண்டன், சதீஷ், பிரபு ராமகிருஷ்ணன், பார்த்திபன்,கிருபா சங்கர் கார்த்திகேயன், வெற்றி, சிவம், ஜான், வில்லன் வில்லன், சரவண குமார் என ஒவ்வொருவரையும் பற்றியும் நிறைய சொல்லலாம்.. சாருவிடம் இப்படி ஒரு சக்தி வாய்ந்த இளம் படை இருப்பது பெருமையாக இருந்தது..
சாரு வருவ்தற்கு முன் இலக்கியம், அரசியல் , சினிமா என பல விஷ்யங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென பரபரப்பு..

ஒரு ஜென் குரு காரில் இருந்து இறங்கினார்... அட.. நம்ம சாரு... வித்தியாசமான தோற்றம்...பேச்சிலும் நிறைய வித்தியாசங்கள்...
பாஸ்கரும், பாத்திபனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..சற்று நேரத்துக்கு பின் உரையாடல் தொடங்கியது... கேள்வி கணைகள் பாய்ந்தன.. பதில்களும் கருத்து செறிவுடன் வந்தன...

*************************************************

திடீரென அய்யப்பனை தரிசிக்க சென்றீர்களே .. இந்த எண்ணம் எப்படி வந்தது?

பல காரணங்கள்..
என் நண்பர் ஒருவரை அடிக்கடி சந்திப்பது வழ்க்கம்..அவரது அய்யப்பன் அனுபவங்கள் ஆச்சர்யமாக இருந்தன,, நேர்மையாக , ய்தார்த்தமாக இருந்தன... அவர் இப்படி சொல்வதே எனக்கு ஓர் அழைப்பாக தோன்றியது..

வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அம்சமும் ஒரு காரணம்..அமெரிக்காவில் ஒரு மில்லியனர் சற்றும் எதிர்பாராத வகையில் சிறை செல்ல வேண்டியதாகி விட்டது...அவசரத்தில் ஷேவிங் செட் பைக்கு பதில் , ரிவால்வர் பையை எடுத்து வந்ததுதான் அவர் செய்த பிழை.. வாழ்வின் இந்த எதிர்பாராத த்ன்மை, அபத்தம் போன்றவை அச்சமூட்டக்கூடியவை... இதை சமாளிக்கும் வலிமையை பெறுவதன் ஆலயம் சென்றதற்கு ஒரு காரனம்..

அரசன் போல இருக்கும் ஒருவனை, நிர்வாணப்படுத்தி, கழுதை ஊர்வலம் நடத்தி அசிங்கப்படுத்வது போல சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்... அவர்கள் மேல் எனக்கு இப்போது எந்த கோபமும் இல்லை..மன உளைச்சலும் இல்லை.... அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு  மீண்டெழ ஆலய பயணம் தேவைப்பட்டது..எனவே அவர்களும் ஒரு காரணம்...

சில நாடுகளில் எழுத்தாளனை சிறையில் தள்ளி அவன் வாயை அடைப்பார்கள்.. நம் நாட்டில் போலியான அவதூறுகளால் அவனை அடக்க நினைப்பார்கள்... இதை சமாளிக்க்கும் மனோ வலிமை தேவை

நீங்கள் எதிர்பார்த்தது சபரிமலையில் கிடைத்ததா?

வாழ்க்கை என்பதே எதிர்பாராமல் கிடைத்த ஒன்று...  எதிர்பார்ப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அய்யப்பன் தரிசனம்... கடவுள் இருக்கிறார் இல்லை. என்பதற்கு அப்பாற்பட்டு, ஒருவர் சபரி மலை செல்லவில்லை என்றால் அவர் வாழ்வில் ஒரு முக்கிய விஷ்யத்தை தவற விடுகிறார் என பொருள்.. அது ஓர் அற்புதம்... அந்த அனுபவத்தை பெறாமல் ஒருவர் இழந்து விட்டால், மிகப்பெரிய ஒன்றை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்..

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கோயிலில் முதல் மரியாதை... சுலப்மாக சாமி தரிசனம் செய்யலாம்.. ஏழை கியூவில் நிற்க வேண்டும்... இப்படி ஏற்ற தாழ்வு இருக்கும் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

இந்த ஏற்ற தாழ்வைத்தான் சீரோ டிகிரி பேசுகிறது..பிச்சாவரம் சந்திப்பில் ஓர் ஆட்டின் கழுத்தை அறுத்து, சமைத்து உண்டு மகிழ்ந்தோம்... ஓர் ஆட்டின் வலி எங்களுக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? என கேட்டு கொண்டேன்..அந்த வலியை என்னால் என்றும் மறக்க முடியாது... புணர்ச்சி முடிந்ததும் இறந்து விடும் பூச்சி பற்றி சீரோ டிகிரியில் எழுதி இருக்கிறேன்... பெண் பூச்சியின் அழைப்பு ஒலி , ஆண் பூச்சிக்கு மரணமாகிறது...
இது போல எத்தனையோ  ஏற்ற தாழ்வுகள் உலகில்  இருக்கின்றன.. இதற்கு முன் நீங்கள் சொன்ன , விவகாரம் மிக மிக சாதாரணமானது...

எழுத்தாளனாக இருப்பது துன்பம் மிகுந்த வேலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருந்தும் சிலர் ஏன் எழுதுகிறார்கள்?

பல் காரணங்கள்... எழுத்து மீதான தீராத காதல்...
எழுத்தின் மீதான அடிக்‌ஷன்
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்த்திதாலும், மூச்சு விட மற்ப்பதில்லை... எழுத்து மூச்சு போன்ற விஷ்யம்..

படிப்பவர்கள் சிலராக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு நிஜம்.. அந்த அன்புக்காக எவ்வளவு சிரமங்களையும் சந்தித்து எழுதலாம்


( சீரோ டிகிரியை எப்படி படிப்பது? எழுத்தாளன் ஆவது எப்படி? வாழ்க்கை என்றால் என்ன ? அடுத்த நாவல் எதைப்பற்றியது ? )  அடுத்த பாகத்தில்.... 

இரண்டாம் பாகம் படிக்க இதை சொடுக்கவும்


http://thehotstills.blogspot.com




  • http://thehotstills.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger