தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் நேற்று முன்தினம் ( பிப்ரவரி 08 ) திருப்பதிக்கு சென்றார். அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத் சென்று இருந்தார்.
தனுஷ் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்திய பின்னர், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன நேரத்தில் தரிசனம் செய்தார்கள்.
தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் நிருபர்களிடம் " எனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த், ஏழுமலையான் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் '3' படத்திற்காக நான் சொந்தக் குரலில் பாடிய 'WHY THIS KOLAVERI' பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக அங்குள்ள எனது ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி பாடியுள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
எனவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நான் தொடர்ந்து சினிமாவில் சொந்த குரலில் பாடுவேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் உருவாக்கிய சச்சின் பாடலை YOUTUBE இணையத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " யாரோர் சச்சின் பாடலை இணையத்திலிருந்து நீக்கச் செய்திருக்கிறார்கள். ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் அப்பாடலுக்காக உழைத்திருக்கிறோம். அதை நீக்கிக் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமே மீண்டும் இணையத்தில் அப்பாடலை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்." என்று தெரிவித்தார்.
தற்போது சச்சின் பாடல் மீண்டும் YOUTUBE இணையத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?