அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள சர்வதேச சந்தை ஒன்றில் இடம்பெற்ற அபார கடத்தல் முயற்சியிலிருந்து ஏழு வயதை உடைய பிரிட்னி பாக்ஸ்டர் எனும் சிறுமி தப்பிப்பிழைத்துக் கொண்டார்.
பொதுமக்கள் அதிகம் காணப்படும் சர்வதேச சந்தையில் சிறுவர் விளையாட்டுப்பொருட்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுமியை கடத்த முயன்ற நபர் தனக்கான நேரம் வரும்வரை பத்துநிமிடங்கள் வரை காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமி அவனைத்தாக்கிவிட்டு தப்பிவிட்டாள். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பின் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இருந்தும் குறித்த இளைஞர் தான் யாரையும் தொடவில்லை எனவும், தான் குற்றவாளி இல்லை எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?