Saturday, 11 February 2012

சட்டென்று ‘காரியத்தை’ முடிப்பவரா நீங்கள்? காமத்தில் அது கூடாது!!

 


காதலில் வேகம் இருக்கலாம். ஆனால் காமத்தில் அது கூடாது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். சட்டுப்புட்டென்று 'காரியத்தை' முடித்து விட்டு அக்கடா என்று குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்.
பார்ட்னரின் உணர்வுகளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் 'வேலை' முடிந்தவுடன் நீட்டிப் படுத்து விடும் ஆண்கள் மீது பெண்களுக்கு கடும் கோபம் வருமாம்.
இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு சொல்கிறது. காதல் கனிந்து உறவைத் தொடங்கும்போது நடத்தப்படும் முன்விளையாட்டு க்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளையாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகுமாம்.
அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தாமல் அல்லது கவனிக்காமல், அரவணைத்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகும்போதுதான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.
5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அதில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்னரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
44 சதவீதம் பேர் 'முன் விளையாட்டை' அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட்டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
38.8 சதவீதம் பேர் செக்ஸ் விளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங்களது பார்ட்னர்களுடன் விவாதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள்ளதாம்.
மொத்தத்தில் பெண்களுக்கு முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவுக்குப் பிந்தைய நெருக்கமும், அன்யோன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான தீனி கிடைத்த உணர்வு ஏற்படுகிறதாம்.
கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர்கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் ரொம்ப சுயநலம் என்கிறார்கள்.
'தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடிசின்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
பெண்களைப் பொருத்தவரை, ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம். அந்த 'டார்கெட்'டை முடித்தவுடன் 'ரிடயர்ட்' ஆகி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது.
அதேசமயம், உடலுறவை முடித்த பின்னரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதியபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களை பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்.
இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீது, பெண்களுக்கு காதல் பொங்கி வழியுமாம்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger