Saturday, 11 February 2012

டுவிட்டரில் வம்பிலுக்கும் சிம்பு - தனுஷ்!

 
 
தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை

உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger