Saturday, 11 February 2012

7-ஆம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த ஆசிரியர் கைது

 
 
 
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொர்லா கண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்தவர் அனுமந்தப்பா (38). இவர் 7-வது வகுப்பு மாணவிகளுக்கு கணக்கு பாடம் எடுத்து வந்தார்.
 
இந்த வகுப்பில் பாடம் படித்த 13 வயது மாணவியிடம் ஆசிரியர் அனுமந்தப்பா, "நீ இப்படி படித்தால் 'பாஸ்' ஆக முடியாது. எனவே வகுப்பு முடிந்த பிறகு உனக்கு தனியாக பாடம் எடுக்கிறேன் வா" என்றார். ஆசிரியரின் வார்த்தையை நம்பி அந்த மாணவி பாடம் படிக்கச் சென்றார்.
 
ஆரம்பத்தில் பாடம் சொல்லிக் கொடுத்த அவர், பின்னர் மாணவியின் ஆசையை தூண்டும் வகையில் நடந்து கொண்டார். மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியரின் விருப்பத்துக்கு மாணவி உடன்படவில்லை. எனவே, "நான் சொல்வது போல் நீ நடக்காவிட்டால் உன்னை 7-வது வகுப்பில் 'பெயில்' ஆக்கி விடுவேன்" என்று மிரட்டினார்.
 
இதனால் பயந்துபோன மாணவியை ஆசிரியர் அனுமந்தப்பா கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். இதுபோல் 6 மாதம் அந்த மாணவியை தன் ஆசைக்கு அவர் பயன்படுத்தி இருக்கிறார்.
 
குடியரசு தினவிழா அன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, தனியாக வரும்படி ஆசிரியர் அழைத்துள்ளார். ஆனால் மாணவி அவரது பிடியில் சிக்காமல் வீட்டுக்கு சென்று விட்டாள். இதனால் ஆசிரியரின் தொந்தரவு அதிகமானது.
 
தனது மன உளைச்சல் குறித்து மாணவி தனது தோழிகளிடம் தெரிவித்தார். தகவல் தலைமை ஆசிரியருக்கு சென்றது. தாய் இல்லாத அந்த மாணவி தனது பாட்டியுடனும், விவசாயியான தந்தையுடனும் வசித்து வந்தார்.
 
அவளுக்கு நடந்த இந்த கொடுமை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் 6 மாதமாக மாணவியை மிரட்டி கற்பழித்த உண்மை தெரிய வந்தது. இதையடுத்து, பள்ளி வளர்ச்சி கண்காணிப்புக் குழு மூலம் ஆசிரியர் அனுமந்தப்பா குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
 
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியர் வேலையில் இருந்தும் அனுமந்தப்பா 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
 

 


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger