ஹாலிவுட்டில் 2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜர்னி டூ சென்டர் ஆப் இயர் படத்தின் இரண்டாம் பாகமான ஜெர்னி-2 படம் தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
பதினேழு வயது சிறுவன் ஜான் ஆண்டர்சன் உலகில் பெரிய மர்ம தீவு இருப்பதுபோல் உணர்கிறான். அதை காண தனது சித்தப்பா ராக்கை துணைக்கு அழைத்துக் கொண்டு விமானத்தில் செல்கிறான். வழியில் விமானம் வெடித்து சிதற தேடிச்சென்ற மர்மத் தீவு அருகே விழுகின்றனர்.
அங்கு பெரிய ருத்ரபூமி தெரிகிறது. இயற்கைக்கு மாறான விலங்குகள், எரிமலைகள், தங்க மலைகள், கொட்டும் தங்க மழை, அசுரப் பறவைகள், ராட்சத தேனீக்களை கண்டு மிரள்கின்றனர். அவற்றிடம் இருந்து தப்பி கடலுக்கடியில் உள்ள மர்ம தீவில் வசிக்கும் ஜான் ஆண்டர்சன் தாத்தாவை சந்திக்கின்றனர்.
அந்த தாத்தா விசித்திர உலகம் நான்கு நாளில் ருத்ர பூமியாக மாறி உலகை அழித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அந்த ஆபத்தில் இருந்து மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை ராம நாராயணனின் அழகர் பிலிம்சும், வார்னர் பிரதர்சும் இணைந்து வருகிற 10-ந் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?