ஒரு சிம்பிளான உடல்பயிற்சி, எல்லாரும் காலை மாலை குளிக்கிறீங்கதனே [[ சிபி குளிப்பதில்லை எனவே அவனை ஆட்டத்தில் சேர்க்கவேணாம் ]] பாத்ரூம் ஷவர்ல குளிக்கிறவிங்க இன்னையில் இருந்து பக்கெட்டில் தண்ணி பிடித்து, மக்கால தண்ணியை மோந்து தலையில் ஊற்றி குளியுங்கள்.
ஸ்பெஷல் டிஸ்கி : மிகவும் மனவேதனையுடன் ஒரு பிராப்ள நாட்டாமை பிளாக் நாஞ்சில்மனோ வலைதளத்தில் தடைசெய்யப்படுகிறது, காரணம் என் உயிர் நண்பர்களை தாக்கி எழுதுவது, என் உயிர் நண்பர்களை தாக்கிய தமிழ் பொணத்தையே போடா வெண்ணை என்றவன் நான் என்பது நண்பர்களுக்கு நன்றாக தெரியும்.
எவ்வளவோ பொறுமையாக இருந்து அவதானித்துதான் இதை எழுதுகிறேன், என் உயிர் நண்பர்கள் என வரும் பட்சத்தில் நான் ஒரு சுயநலவாதிதான் என்பதை மறுபடியும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்....!
மும்பைவாசியான நான், ரௌத்திரம் பண்ண வேண்டிய இடத்தில் கண்டிப்பாக ரௌத்திரம் காட்டியே ஆகவேண்டும் என்ற என் அப்பாவின் புத்திமதியை கடைபிடிப்பவன், அதுவும் நண்பர்களுக்கு என்றால் சுளுக்கெடுக்க சொல்லி தெரிய வேண்டியது இல்லை...!!!
அந்த பதிவர் யார் என்று நண்பர்கள் பகிரங்கமாக பெயர் சொல்லி தடை போடுவார்கள் அவரவர் பதிவுகளில், அதனால் நானும் தற்போது பெயரை சொல்லவில்லை.
நாஞ்சில்மனோ பதிவில் கோபமா...? ஆம் நண்பர்களே கோபம் சில இடங்களில் தேவைப்படுகிறது, சும்மாவா சொன்னான் மகா பாரதி ரௌத்திரம் பழகு என்று நன்றி நண்பர்களே.....!!!
வலது கையால் ஒருமுறை தலையில் தண்ணி ஊற்றி விட்டு அடுத்து இடது கையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றுங்கள், இது நல்ல ஒரு பயன்தரும் எளிமையான உடல்பயிற்சி....!!!
உடலில் சோப்பு போட்டு தேய்க்கும் பொது உடம்பில் நன்றாக அழுத்தமாக தேயுங்கள், முறுக்கேறிய நரம்புகள் லேசாகும், அடுத்து சோப்பு போடும்போது ஒவ்வொரு காலாக மேலே தூக்கி வைத்துகொண்டு காலில் சோப்பு போடாமல் நீங்களே குனிந்து காலுக்கு சோப்பு போடுங்கள் இதுவும் ஒரு அருமையான உடல்பயிற்சிதான்...!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுடில்லி: ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் எதிர்காலத்தில் அரசு பதவியில் நீடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய இஸ்ரோ தலைவர் ஹிட்லர் போல் செயல்படுகிறார் என முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாஞ்சில்மனோ : எங்கே போனாலும் கொசு தொல்லை மாதிரி இந்த மலயாளிங்க ஆட்டம் தாங்க முடியல சித்தப்பு....?!
நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாஞ்சில்மனோ : அடப்பாவிகளா 64 வருஷமா என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க சரி சரி இப்பவாவது கண்ணை துறந்தாங்களே சந்தோசம் [[கொய்யால]]
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், அபு சலீமை போர்சுகல்லில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது தவறு என போர்ச்சுகல் நாட்டு கோர்ட் தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பின் மீது இந்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள போர்ச்சுகல் கோர்ட்டை அணுகும், என சிபிஐ., டில்லி ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.
நாஞ்சில்மனோ : அடப்பாவிகளா பாவிகளா அப்பாவி மக்களை கொன்னுட்டு ஜாலியா ஜெயில்ல காத்து வாங்கிட்டு இருக்கானுக, ம்ம்ம்ம் இந்த டவுசர் கிழிஞ்ச கேஸை தூக்கிட்டு இன்னும் எத்தனை வருஷமா அலையப்போறானுகளோ, [[காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனமா டுமீல் டுமீல் விட்டமான்னு செய்யாமல் சொதப்புராயிங்களே]]
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் முக்கிய அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களை விட, அவர்களது மனைவிகளுக்கு அதிக சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
நாஞ்சில்மனோ : பூவுடன் சேர்ந்த நாரும் மணம் தருவதை போல ஊழலோடு சேர்ந்த அம்மிணிகளும் நாருகிறார்கள் பணத்தில் சொத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு தயாளு அம்மாள், கனிமொழி மாதிரி இல்லையா...?
புதுச்சேரி: அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.60 லட்ச ரூபாய் மோசடி செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
நாஞ்சில்மனோ : பஹ்ரைன் வரனுமா ரெண்டு லட்சம் ரூபா எனக்கு தாங்க நான் கூட்டிட்டு போறேன் ஏமாத்தமாட்டேன், ஏமாத்துனா ஆபீசர் பெல்ட்டோட கனவுல என்ட்ரி ஆகிருவார் அவ்வ்வ்வ்வ்....
முன்னாள் அமைச்சர் ராஜாவையும், தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் பெகுராவையும் தவிர, அனைவரும் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். ராஜா இதுவரை, ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. பெகுராவின் ஜாமின் மனுவை, டில்லி ஐகோர்ட் கடந்த நவம்பரில் நிராகரித்தது. அதையடுத்து, அவர் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பெகுராவின் ஜாமின் மனு, வரும் பிப்ரவரி 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
நாஞ்சில்மனோ : ஆமா பெரிய செக்கிழுத்த தியாக செம்மலுங்க இவனுகளுக்கு ஜாமீன் கொடுத்தா நாடு உருப்பட்டுரும் போங்கடாங்கோ.....
ஏற்கனவே அறிவித்த திட்டங்களை புதிய திட்டங்கள் போல், முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நாஞ்சில்மனோ : எல்லாரும் உங்களை மாதிரியே இருக்க முடியுமா என் தா[பா]னை தலைவா....!!
சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள, தங்கபாலு ஆதரவாளர் கோபிநாத் எம்.எல்.ஏ.,வை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் வலியுறுத்த, மத்திய அமைச்சர் வாசன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், மீதமுள்ள நான்கு பேரில், சட்டசபை காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.
நாஞ்சில்மனோ : சட்டையையும் வேஷ்டியையும் கிழிச்சு உருவிட்டு நாறுங்கடா நாதாரிகளா, ரெண்டு கை"நிறைய மண்ணு அள்ளி வச்சிக்கோங்க இப்போதே.....!
கோட்டயம்: "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை விட, அங்கு புதிய சுரங்கக் கால்வாய் அமைத்து, அணை நீர்மட்டத்தைக் குறைக்கலாம்' என, முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் முன்னாள் தலைவர் சி.பி.ராய் தெரிவித்தார்.
நாஞ்சில்மனோ : ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே சேட்டா......!!!
சசிகலாவின் தம்பி திவாகரனின் சொல்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய, நான்கு எஸ்.பி.,கள், அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர். இதுவும் திவாகரனின் திருவிளையாடலில் ஒன்று என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாஞ்சில்மனோ : அடடடடடடடா அண்ணன் ஒரு மார்க்கமாத்தான் செயல்பட்டுருக்காரு ம்ம்ம்ம்ம்ம்ம்....!!!
நான் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் என் சொந்த பணத்திலிருந்தோ, கட்சிப் பணத்திலிருந்தோ நிறைவேற்றியதல்ல; அனைத்தும் அரசு பணம் தான்' என கூறியிருக்கிறார், முன்னாள் முதல்வர் கருணாநிதி.
நாஞ்சில்மனோ : ஹா ஹா ஹா ஹா அதான் புகுந்து விளையாடி இருக்காங்க பல முன்னாள்கள் பாவிங்களா மக்கள் காசை இப்பிடியா கொள்ளை அடிப்பீங்க...? இதை கேட்க விக்கி என்ற பக்கி விரைவில் வரப்போறான் ஜாக்குரதை...!!!
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களைப்பற்றி, தொடர்ந்து அவதூறு செய்தி வெளியிட்டால், தினமலர் அலுவலகத்திற்குள் புகுந்து போராடுவோம்'', என, அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.
நாஞ்சில்மனோ : ஏற்கனவே அந்த பத்திரிக்கை நாறிப்போயி கிடக்கு, ரஷ்யாகாரனுக்கு சிங்கி அடிக்குறதுனால நல்ல ஒரு அமௌன்ட் கிடைச்சிருக்கும் போல.....!!!???
போன இடம் தெரியாமல் போன கடலூர் "புயல் நிவாராணம்.....!!!
நாஞ்சில்மனோ : இதான் அப்போதே கரடியாக கத்தினோம் அம்மா'விடம், அடிப்படைவாதிகளுக்கு அந்த உதவி போய் சேராவிட்டால் ஆட்சி சரியில்லை என்று மக்கள் சொல்வார்கள் தேவையா சும்மாவா சொன்னாங்க செய்வன திருந்தச்செய்யுன்னு....!!!!
கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
நாஞ்சில்மனோ : உங்களை மாதிரி ம[கொ]லையாளிங்க வெளியுறவு துறையில் இருப்பதால் ஒருநாளும் பாகிஸ்தான், சீனா, இலங்கை உறவு சுமுகமாக சீராகாது பாட்டி, போங்க போயி பியூட்டி பார்லருல போயி மேக்கப் போட்டுட்டு போட்டோவுக்கு போஸ் குடுங்க போஸ்....!!!
எவ்வளவோ பொறுமையாக இருந்து அவதானித்துதான் இதை எழுதுகிறேன், என் உயிர் நண்பர்கள் என வரும் பட்சத்தில் நான் ஒரு சுயநலவாதிதான் என்பதை மறுபடியும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்....!
மும்பைவாசியான நான், ரௌத்திரம் பண்ண வேண்டிய இடத்தில் கண்டிப்பாக ரௌத்திரம் காட்டியே ஆகவேண்டும் என்ற என் அப்பாவின் புத்திமதியை கடைபிடிப்பவன், அதுவும் நண்பர்களுக்கு என்றால் சுளுக்கெடுக்க சொல்லி தெரிய வேண்டியது இல்லை...!!!
அந்த பதிவர் யார் என்று நண்பர்கள் பகிரங்கமாக பெயர் சொல்லி தடை போடுவார்கள் அவரவர் பதிவுகளில், அதனால் நானும் தற்போது பெயரை சொல்லவில்லை.
நாஞ்சில்மனோ பதிவில் கோபமா...? ஆம் நண்பர்களே கோபம் சில இடங்களில் தேவைப்படுகிறது, சும்மாவா சொன்னான் மகா பாரதி ரௌத்திரம் பழகு என்று நன்றி நண்பர்களே.....!!!
http://tamil-vaanam.blogspot.com
http://video-news-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?