கட்சி மேலிட உத்தரவின்படி, சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த அமைச்சர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். கர்நாடக சட்டசபையில், பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் ஆபாச படம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து, கட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் ராஜினாமா கடிதத்தை, முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். சட்டசபைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஆபாசபடம் பார்த்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர்.
சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார். இந்த விவாதத்தை கவனிக்காமல், அப்போது, மேலே புகார் கூறப்பட்ட அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்.
இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?