கிரிக்கெட் உலகில் யுவராஜ்சிங் மட்டுமல்ல; மேலும் பல வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அதே நாட்டைச்சேர்ந்த கென் வேட்ஸ்வொர்த், தவே காலகான், டப்டி மான், சைமன் ஓ டனல் ஆகியோரும் ஏதாவது ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் மைக்கேல் கிளார்க், காலகான், ஓ டனல் ஆகியோர் நோயிலிருந்து மீண்டு விட்டனர். மற்ற இருவரும் பலியாகிவிடார்கள். வேட்ஸ் வொர்த் கீப்பராக இருந்தவர். ஒரு தினப் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்த விக்கெட்க் கீப்பர். இவருக்கு தோல் புற்று நோய் தான் இருந்தது. 29 வயதிலேயே இறந்துவிட்டார்.
மைக்கேல் கிளார்க்கிற்கு மூக்கில் 2006ம் ஆண்டில் தோல் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு குணம் கிடைத்தது. பின்னர் அவரே தோல் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய பிரச்சார தூதராகவும் செயல்பட்டார்.
ஓ டன்ஸ், 1980 களில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். 1987ல் உலககோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல உறுதுணையாக இருந்தார்.
இது தவிர சர்பிராங் வொரல், மால்கம் மார்சல், இங்கிலாந்தை சேர்ந்த பிரட் ட்ரூமன், பிரையன் ஸ்டேதம்த்,ராய் பிரடரிக், புத்தி குந்தரன், கிரகாம் டில்லி, பிரையன் லுகுரஸ்ட் மற்றும் இன்சான் அலி ஆகிய வீரர்களும் புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டார்கள். இவர்களில் சிலர் இறந்துவிட்டனர்.
மேலும் டேவிட் செப்பேடு என்ற நடுவரும் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 68 வயதில் இறந்தார். இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெப் பாய்காட்டுக்கு 2002 ம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டது. ஆனால் அவர் குணமடைந்து விட்டார். கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் சில வீரர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?