ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு இருவரும் தயாராகிறார்கள் என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நான் கேரளாவைச் சேர்ந்த பெண். சம்பிரதாய பழக்க வழக்கங்களை கடை பிடிக்கும் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். எனது திருமணம் நான் பிறந்த ஊரான கேரளாவில் தான் நடக்கும். என் குடும்ப சம்பிரதாயப்படியே அது நடக்கும். நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அதில், சல்மான்கானும் ஒருவர்.
அவருக்கும் எனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. சல்மான்கான் என்னை விட வயதில் பெரியவர். அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் என்னை விட அழகான பெண்கள் நிறைய பேர் கியூவில் வந்து நிற்பார்கள்.
சல்மான்கானுக்கும் எனக்கும் நீங்கள் கற்பனை செய்கிற மாதிரி எந்த உறவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் எனது திருமணத்தை பற்றி யோசிப்பேன். எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்த அறிக்கை மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அசின் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?