தேனும் தெளிதேனும் இருந்தும்
அது எனக்கு இனிக்கவில்லையடி
என்னவளே நீ என்னருகில் இல்லாமல்...
பஞ்சணையும் சுக
தலையனையும் கந்தவர்க்க
மணமிருந்தும்.....
மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட
மெல்லிய மெத்தை
வெள்ளைப்போளம் இருந்தும்....
மதிமயங்கும் மது இருந்தும்
நம்மை காண நிலா காத்திருந்தும்
இருளின் மேகங்கள் சுற்றி வந்தும்...
திரளான கப்பல்கள்
தினம்தோறும் வந்து என்னை பார்த்து
கேலி செய்கிறது...
ஆயிரம் நறுமணம்
கமழும் பூக்கள் இருந்தும்
என் மஞ்சம் அந்த பூக்களை நெருங்க விடவில்லை...
உன்னைப்போல பெண்ணை
நான் இதுவரை கண்டதில்லை
என்றேன்....
உன் கண்கள் அழகாக
இருக்கிறது என்றாய்
என் கண் மூலம் காதலை கண்டவளே....
வெண்ணிலவே என்றேன்
நிலவில் கருப்பாக
தெரிவது நீ என்றாய்....
தென்றலே என்றேன்
அதில் ஆடும்
மரம் நீ என்றாய்....
தேன்மொழியே என்றேன்
அங்கே பேசும்மொழி
நீ என்றாய்...
கனியே கனியமுதே
என்றேன்
அதின் விதை நீ என்றாய்...
எப்போதும் என் கனவில்
நீ என்றேன்
அந்த கனவே நீ என்றாய்...
இனிக்கும் மாம்பழமே என்றேன்
அதுதான்
நீ வண்டாக வந்துவிட்டாயோ என்றாய்...
நீயில்லாமல் கண்ணீரின்
துணை கொண்டு வாழ்கிறேன் என்றேன்
அந்த கண்ணீரே நான்தான் என்றாய்...
எத்தனையோ சுகங்கள்
என்னருகில் என்னை மயங்க வைத்து இருந்தும்
என் மஞ்சம் வெறுமையாக, நீ இல்லாமல்......!!!!
டிஸ்கி : ஹா ஹா ஹா ஹா என்னாது யுத்தமா....? சிப்பு சிப்பா வருது அண்ணே.....நான் சொன்னது ஈராக் அமெரிக்கா யுத்தத்தை ஹீ ஹீ ஹீ ஹீ.....[[எலேய் நீயும் உள்குத்தா டிஸ்கி போடுறியே மனோ]]
http://tamil-vaanam.blogspot.com
http://video-news-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?