மணிரத்னம் தனது படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 'கடல்' என தலைப்பிட்டு இருக்கும் இப்படத்திற்கு ராஜுவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.
இது வரை மணிரத்னம் இயக்கிய எந்த ஒரு படத்திற்கும் RED ONE கேமராவை பயன்படுத்தியது இல்லை. முதன் முறையாக 'கடல்' படத்தின் அனைத்து காட்சிகளையும் RED ONE கேமராவில் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் ராஜுவ்மேனன்.
RED ONE கேமராவை முழுப் படத்திற்கும் பயன்படுத்தி 'அச்சமுண்டு அச்சமுண்டு' படம் தயாரானது.
சந்தோஷ் சிவன் நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒளிப்பதிவு செய்து வரும் 'துப்பாக்கி' படத்தின் அனைத்து காட்சிகளும் RED ONE கேமராவில் ஒளிப்பதிவு செய்து வருகிறார்கள்.
பெரிய இயக்குனர், பெரிய நடிகர்கள் என பலரும் இப்படி RED ONE-க்கு மாறுவதால், மற்றவர்களும் மெல்ல மெல்ல வழக்கமான பிலிம் ரோலைத் தவிர்த்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்கும் RED ONE கேமராவைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
வருங்காலத்தில் 'ரீல்' சுத்த முடியாது போலிருக்கிறது.!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?