Thursday 15 December 2011

முல்லைப்பெரியார் பற்றி பிரபல பதிவர்களின் கமெண்ட��ஸ்...!!!



முல்லைப்பெரியார் பற்றிய போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், நம்முடைய பதிவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பேட்டி எடுத்து பார்ப்போம்....



திவானந்தா : எலேய் கேரளா தண்ணி தரலைன்னா என் ஹோட்டல்ல ஒரு மலையாளிக்கும் தண்ணி தரமாட்டேன், விக்கிட்டு சாவுங்க....


சிபி : தண்ணீர் தரலைன்னாலும் ஓகே, தந்தாலும் டபுள் ஓகே, என் மானம் சூடு சொரனை எல்லாம் விக்கிகிட்டே கொடுத்துட்டேன், இனி அவன்தான் என் பங்குக்கு பொங்குவான்...வேணும்னா நான் கால்ல விழ ரெடியா இருக்கேன்...


மெட்ராஸ்பவன் : உணர்ச்சி வசப்பட்டு நாம எந்த முடிவும் எடுத்துறப்புடாது, ஏன்னா கேரளாவிலும் நம்மாளுங்க இருக்காயிங்க கவனமா செயல்படனும், இருங்க நான் போயி சாப்புட்டுட்டு வாறேன்..


ஆபீசர் : கடல்ல போற தண்ணிதானே கொஞ்சம் வயித்துக்கும் ஈயலாமே....?

பக்கி ச்சே ச்சீ விக்கி : டேய் கேரளாக்காரன் ஒற்றுமையா இருக்கான்னா, அவர்கள் கொஞ்சம் ஜனத்தொகைதான் ஆனால் தமிழர்களின் ஜனத்தொகையை பார், அதான் ஒற்றுமையா நிக்கமாட்டேங்குரானுக...


கே ஆர் விஜயன் : அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது, இரு மாநிலத்தவரும் இதை புரிந்து கொள்ளவேண்டும்...


கருண் : என் ஊர் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள், இது நியாயமா...?


காட்டான் : நம்முடைய உரிமையை என்றுமே அவர்களுக்கு விட்டு கொடுக்கப்டாது அண்ணா....


சம்பத்குமார் : ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தமிழக மக்களை சீண்டிப்பார்த்தவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை...


வீடு : ஏன் நம்முடைய அரசியல்வியாதிகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள், இவனுகளையும் விடக்கூடாது...


நண்டு நொரண்டு : நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்...


"என் மனவானில்" செல்வி : கேரளாவும் தமிழ்நாடும் சண்டை போட்டுக்கொள்ளாமல், பேசி தீர்க்கவேண்டும் பிரச்சினையை...


ரூஃபினோ : சிறுமிகளை கொடுமை படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன், கேரளா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்...


மனசாட்சி : கேரளாவுக்கு, இறைச்சி, பால்பவுடர், அரிசி, காய்கறிகள், ஆடுகள், மாடுகள், மணல்கள் கொண்டு போவதை உடனே நிறுத்தவேண்டும்...


மதுமதி : நல்லதே நடக்கட்டும், சண்டை போடாதீங்கப்பா...

துஷ்யந்தன் : தமிழச்சிகள் மீது கைபோட்டவன் கையை அருத்துவிட்டுதான் பேச்சு வார்த்தையே ஆரம்பிக்கணும்...


மயிலன் : நான் இதைப்பற்றி ஒரு குறும் படம் எடுக்கலாம்னு இருக்கேன்...

நிரூபன் : பாஸ் நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் பாஸ், அநியாயம் எங்கே நடந்தாலும் நான் அங்கே இருப்பேன் பாஸ்...


கவிதை வீதி சௌந்தர் : நாற்று நட்டாயா களை பறித்தாயா, வயல் அறுத்தாயா, நெல்லை இடித்து பொழித்து அரிசியாக மாற்றினாயா, மானங்கெட்டவனே தண்ணீர் மட்டும் தராமல் நீ உவ்வாவுக்கு எங்கேடா போவீங்க...?


பன்னிகுட்டி : இந்த நாதாரிகளுக்கு கக்கா காப்பி போட்டு குடுத்துற வேண்டியதுதான் வேற வழியே இல்லை...

"சிரிப்பு போலீஸ்"ரமேஷ் : ஒரு கேரளா பெண்ணை கல்யாணம் செய்து கண்கலங்காம காப்பாத்தனும்னு நினைச்சேன், இனி அது கேன்சல்...


"கோமாளி"செல்வா : அண்ணா வேணும்னா நான் போயி கேரளாவுல கொசு மருந்தை தெருவுல அடிச்சி வீட்டுக்குள்ளே போக வச்சிறட்டுமா...?

சென்னை பித்தன் : அவனில்லாமல் அணுவும் அசையாது, டேம் அசஞ்சிருமா என்ன...?


கோமதி அக்காள் : கேரளா என்ற தெய்வத்தின் நாடு இப்படி தறிகெட்டு நடக்கலாமா...??

மேனகா : இவனுகளுக்கு திங்குறதுக்கு இனி களிதான் பொங்கி குடுக்கணும்...

வெங்கட் நாகராஜ் : போச்சுடா, கேரளா சுற்றுப்பயணத்திற்கு ஆப்பு பலமா வச்சிட்டானுகளே...!!!


கக்கு மாணிக்கம் : ஒரு பயலையும் சும்மா விடக்கூடாது, அதேபோல நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தன் வீட்டு தண்ணீர் பைப்புகளை உடைத்து எறியவேண்டும்...

அம்பாளடியாள் : நான் ஒரு கவிதை ஏற்றி அறம் பாடப்போகிறேன் வழியை விடுங்க...


"நாய்நக்ஸ்"நக்கீரன் : நான் வேணும்னா தமிழ்பணம் போயோரிலியை போட்டு தாக்குன மாதிரி போட்டு தள்ளட்டுமா தலைவா...?

சத்திரியன் : சிங்கப்பூர்ல ஒரு மலையாளியும் கண்ணுல அம்புடமாட்டேங்குரானுகளே, கைவேற பலமா அறிக்குது...


அவர்கள் உண்மைகள் : மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பை அங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்...


ஆமினா : பெண்களிடம் வீரத்தை காட்டிய மலையாளிகளை நினைச்சாலே அருவருப்பாக இருக்கிறது, தமிழர்கள் என்றால் அவர்களுக்கு அம்புட்டு இளக்காரமா...?

ராஜி : அண்ணே ம்ம்ம்னு சொல்லுங்க அண்ணே இப்பவே அருவாளை தூக்கிட்டு வந்துர்றேன் [[ஆஹா கொலைவெறியா இருக்கே தங்கச்சி]]


ரமணி குரு : கேரளாவுக்கு போகும் பொருட்களை தடை செய்வது என்பது, தமிழக வியாபாரிகளையும் பாதிக்கும் என்பதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...!!!

அரசன் : அப்படியே அணை உடைந்தாலும், அந்த தண்ணீர் மலைகளுக்கு இடையில் ஓடி, இடுக்கி அணைக்கே வந்துவிடும் ஒரு பாதிப்பும் இருக்காது...


சூர்யஜீவா : உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிறது.

"தமிழ்தோட்டம்"யூஜின் : கேரளா அரசு ஆரம்பம் தொட்டே நம்மை வஞ்சித்து வருகிறது இனியாவது நாம் விழித்துகொள்வோம்...


ராம்வி : தண்ணீரும் தராமல் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு இப்போ பொம்பளை மேலேயே கையை வச்சிட்டானுகளா, இதை இப்போதே ரெண்டுல ஒன்னு பார்த்துரனும்...

"கலியுகம்"தினேஷ் : இதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும் [[அய் இது நல்ல ஐடியாவா இருக்கே]]


கோகுல் : தமிழ்நாட்டுல இருந்துதான் தண்ணீர் உருவாகி முல்லைபெரியார் அணைக்கு போகுதுன்னா, ஏன் நாமளே ஒரு அணையை கட்டக்கூடாது...?

என் ராஜபாட்டை : அவர்கள் நம்மை வஞ்சிக்கும் போது, நாமும் அவர்களை வஞ்சிப்பதில் தவறில்லை, எல்லா செக்போஸ்ட்டையும் இழுத்து மூடுங்கலேய்...


ஜெய்லானி : இருங்க நான் சவூதி அரசாங்கத்துகிட்டே பேசி அவனுக அந்நிய செலவானிக்கு ஆப்பு வைக்கிறேன்..

மொக்கைமாமா ராசு : காமெடி கிங் அண்ணன் சந்தானம் அவர்கள், டி ராஜேந்தரை கேரளா அனுப்பி கேரளாவை பயமுறுத்த போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..



சிவா : இனி ஒருக்கா தமிழன், தமிழச்சி மேல கையை வச்சீங்க ராஸ்கல் நான் ஷகீலா படத்துக்கு தடை வாங்கிருவேன் ஜாக்கிரதை...


யானைகுட்டி ஞானேந்திரன் : எலேய் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கலேய் பாப்போம்...


வடிவேலை ஒரு சினிமாவில் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் வரிசையின் நின்னு மண்டையில கொட்டி வீங்க வைப்பான்களே, அப்பிடியே அதை இந்த சிங்கிடி டர்பனை கழட்டிட்டு கொட்டுனா என்னான்னு தோணுது ம்ஹும்...!!!




http://galattasms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger